​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நெல்லையில் அரிசிக் கடையிலும், காரைக்காலில் நகைக்கடையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

நெல்லையில் அரிசிக் கடையிலும், காரைக்காலில் நகைக்கடையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை டவுனில் உள்ள கிருஷ்ண செட்டியார் என்ற பெயரில் இயங்கிவரும் அரிசிக்கடையில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். காரைக்காலில்...

சென்னை சூளைமேடு அசோக் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் சோதனை

சென்னையில் உள்ள நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சூளைமேட்டில் உள்ள அசோக் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடைக்கு சவுகார்பேட்டையிலும் கிளை உள்ளது. இந்த நகைக்கடையின் உரிமையாளர் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரையடுத்து நேற்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சூளைமேட்டில்...

கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் கோட்டைத்தெரு பகுதியைச் சேர்ந்த 19 வயதான ரியா மற்றும் அமீர் ஆகிய இரண்டு இளைஞர்கள், ஆரிப்நகர் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் நீச்சல் பழகச்...

40 அடி ஆழ்துளைக்குள் விழுந்த 4 வயது குழந்தை மீட்பு

மத்தியப் பிரதேசம் தேவஸ் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில், 40 அடி ஆழத்தில் விழுந்த 4 வயது ஆண் குழந்தை 34 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு முயற்சிகளுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் ஆழ்துளைக்...

40 அடி ஆழமுடைய ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க போராட்டம்

மத்தியப் பிரதேசம் தேவஸ் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றின் 40 அடி ஆழத்தில் சிக்கியுள்ள 4 வயது குழந்தையை மீட்க மீட்புக்குழுவினர் கடுமையான போராட்டத்தில் இரவு முழுக்க ஈடுபட்டனர். பண்ணைக் கூலித் தொழிலாளியான ரோஷன் என்பவரின் இரண்டு குழந்தைகள் கஞ்சிபுரா கிராமத்தில் விவசாய நிலத்தில்...

குன்னூரில் அடுத்தடுத்து இரு இடங்களில் காட்டுத்தீ

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் 2 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து நாசமானது. வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ராணுவ மையம் அருகேயுள்ள வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகலில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக பரவிய தீயில்...

மதுராவில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர். தொழிலாளர்கள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தகவலை உள்ளூர் மக்கள் தெரிவித்ததும், விரைந்து வந்த மீட்புக் குழுவினர் அப்பகுதி மக்களின் உதவியுடன்...

ONGCயின் அனுமதியின்றி இயங்கும் எண்ணெய்க் கிணறுகளை மூடாத மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி - ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்

ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் உண்மையான கள நிலவரம் என்ற தலைப்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில்...

புதுச்சேரியில் 4 தங்க நகைக் கடைகளில் நடைபெற்ற வருமான வரிச்சோதனை நிறைவு

புதுச்சேரியில் 4 தங்க நகைக் கடைகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். புதுச்சேரி அம்பலத்தடையார் மடம் வீதியில் அமைந்துள்ள வாசவி ஜூவல்லர்ஸ், பி.ஆர். தங்க மாளிகை, தங்க மாளிகை என்ற கடை மற்றும் அதன் மற்றொரு...

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காகத் தென்கொரியாவுக்குச் சென்ற வடகொரியக் குழுவினர், சிறப்பான முறையில் வரவேற்ற தென்கொரிய மக்கள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காகத் தென்கொரியாவுக்குச் சென்றுள்ள வடகொரியக் குழுவினருக்குத் தென்கொரிய மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தென்கொரியாவின் பியாங்சாங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இரு கொரியாக்களிடையே கடும் பகை இருந்தாலும் அதை மறந்து...