​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தஞ்சையில் ONGC எண்ணெய் கிணற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து 39 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பேரணி

  தஞ்சையில் ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் கிணறு அமையும் இடத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்ற 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.  அம்மாப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 39 கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது....

நாதெள்ளா தங்க நிறுவனம் 379 கோடி ரூபாய்க்கு வங்கிகளில் மோசடி - CBI அதிகாரிகள் வழக்குப்பதிவு

தமிழகம், கேரளா என பல்வேறு மாநிலங்களில் செயல்படும் நாதெள்ளா ஜுவல்லர்ஸ் மீது, தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் செலுத்திய கோடிக்கணக்கான பணத்தை திருப்பி தரும் விவகாரத்தில், மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ...

சென்னையில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து ரூ. 52 லட்சம் பறிப்பு

சென்னை மண்ணடியில், நள்ளிரவில் இரும்புக் கடைக்குள் புகுந்த முகமூடி நபர்கள், கத்தி முனையில் 52 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். செம்புதாஸ் தெருவில், சலீம் என்பவருக்கு சொந்தமான இரும்பு மொத்த வியாபாரக் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், முகமூடி அணிந்த நான்கு...

NPR நகைக்கடை மற்றும் உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை

தேனியிலுள்ள பிரபல என்.பி.ஆர் (( NPR )) நகைக் கடையில் வருமான வரித்துறையினர் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். தேனி - மதுரை சாலையில் உள்ள இந்த நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில் மதியம்...

கோவையில் காணாமல் போனதாகக் கூறப்பட்டவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கொலை செய்து கல்லைக் கட்டி கிணற்றில் போடப்பட்ட ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் என்பவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்ததாகக்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றாக பேசுகிறார்: துரைமுருகன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவ்வளவாக பேச மாட்டார் என்றும், தற்போது நன்றாக பேசுவதாகவும் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கம் அமைதி வளம்...

சென்னையில் ரூ.824 கோடி மோசடி - கனிஷ்க் ஜுவல்லரி மீது சி.பி.ஐயில் புகார்

சென்னையில் இயங்கிய கனிஷ்க் தங்க நகை உற்பத்தி நிறுவனம் மோசடியாக 824 கோடி கடன்பெற்று ஏமாற்றியது தெரியவந்ததால், அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது எஸ்.பி.ஐ. வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, சி.பி.ஐ.யில் புகார் அளித்துள்ளது. சென்னையில் இயங்கி வந்த கனிஷ்க் தங்க நிறுவனம்,...

கரூர் அருகே நகைக் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நகைக் கடையின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் காந்தி கிராமம் என்ற பகுதியில் உள்ள கோபி என்பவரின் கடையில் திருட்டு நடந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகள்...

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 85 சவரன் நகை கொள்ளை

சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து 85 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அயப்பாக்கம் வீட்டு வசதிவாரிய குழியிருப்புப் பகுதியில் வசித்து வரும் லிங்கராஜ் என்பவர், வெளிநாடு செல்லும் தன் மகனை வழியனுப்புவதற்காக நேற்றிரவு 11 மணியளவில் விமான நிலையம்...

சாலையோர விவசாயக் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து, காரில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விவசாய கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில், காரினுள் சிக்கியிருந்தவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பல்லடத்தை அடுத்த சோமனூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். பல்லடம் - உடுமலை சாலையில் கேத்தனூர் அருகே...