​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி ராட்டையை தங்கத்தில் வடித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த நகைத் தொழில் செய்து வரும் சமுத்திரக்கனி என்பவர், ராட்டையை தங்கத்தில் வடித்துள்ளார். ஒருகிராம் 50 மில்லி கிராமில் ஒரு அங்குலம் உயரத்திலும் இரண்டு அங்குலம் நீளத்திலும் இந்த ராட்டினத்தை அவர் வடிவமைத்துள்ளார். ஏற்கனவே சிறிய அளவில்...

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியா வர ஆர்வம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியா வர ஆர்வத்தோடு இருப்பதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க முதன்மைத் துணை செயலாளர் அலைஸ் வெல்ஸ்-யிடம் (Alice Wells) வரும் ஆண்டு இந்தியக் குடியரசு தினத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,...

மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த பெண் குழந்தை மீட்பு

நாகை மாவட்டம் புதுப்பள்ளி பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். புதுப்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கார்த்திக் என்பவரது இரண்டரை வயது பெண் குழந்தை சிவதர்ஷிணி, பக்கத்து வீட்டு தோட்டத்தில்...

கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது சிமெண்ட் சிலாப் உடைந்து உள்ளே விழுந்த 8 பேரில் 3 பெண்கள் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது சிமெண்ட் சிலாப் உடைந்து உள்ளே விழுந்த 8 பேரில் 3 பெண்கள் உயிரிழந்தனர். கல்குளம் அடுத்த சூர்ய பிள்ளையார்குப்பம் கிராமத்தில் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இரவு மின்தடை ஏற்பட்டு குடிநீர்...

கேரள மாநிலத்தில் வெள்ளத்தைத் தொடர்ந்து வறட்சியை எதிர்கொள்ள வாய்ப்பு என தகவல்

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் ஆறுகளிலும் கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் விரைவில் வறட்சி நிலையை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ள நீர் அதிவேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும், வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட நில அமைப்பு மாறுபாடுகள் மற்றும் நில...

ரஷ்யாவிடமிருந்து, S-400 டிரையம்ப் ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக, இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை

ரஷ்யாவிடமிருந்து, S-400 டிரையம்ப்((Triumf))ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக, இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பது குறித்து அமெரிக்கா எந்த முடிவும் எடுக்கவில்லை. 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ரஷ்யாவிடமிருந்து, ஐந்து, S-400 டிரையம்ப்((Triumf))ஏவுகணைகளை...

முக்கொம்பு மேலணையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் 80 சதவீதம் நிறைவு - வெல்லமண்டி நடராஜன்

முக்கொம்பு மேலணையில் நடைபெற்று வரும் தற்காலிக சீரமைப்புப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். மதகுகள் உடைந்த திருச்சி முக்கொம்பு மேலணையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12வது நாளாக தொடரும் பணிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,...

கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி இயக்கப்படும் போர்வெல் இயந்திரங்கள்

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட போர்வெல் வாகனங்களை பயன்படுத்தி ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், பல இடங்களில் உரிய அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.   கொடைக்கானலில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால்...

நள்ளிரவில் நகைக்கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்

புதுச்சேரியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களால், லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின. புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் முகேஷ் என்பவர் நகைக்கடையுடன், அடகுக்கடையும் நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு இவரது கடையின் கிரில்கேட் மற்றும்...

தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது - அமெரிக்கா

தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறைக்கான முதன்மை செயல் அதிகாரி அலைஸ் வெல்ஸ் ( Principal Deputy Assistant Secretary Alice Wells ) வாஷிங்டனில் செய்தியாளர்களுடன் பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும், பாகிஸ்தானில் புதிய பிரதமர்...