​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜோலார்பேட்டையில் இருந்து இன்று ரயிலில் சென்னைக்கு வருகிறது குடிநீர்..!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, 50 வேகன்களில் குடிநீருடன் புறப்பட்ட ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.  சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகள்...

நீர் பற்றாக்குறையில் தமிழகத்திற்கு முதலிடம்..!

தேசிய அளவில் நீர் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 4 ஆயிரத்து 378 நகரங்களில் 756 நகரங்களில் நீர் பற்றாக்குறை உள்ளதாக நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமும், ஜல்சக்தி அமைச்சகமும் பட்டியலிட்டுள்ளது. அதில், அதிக நீர்ப்பற்றாக்குறை நகரங்களின்...

ஒரு வாரத்தில் ரயிலில் சென்னைக்கு குடிநீர்..!

ஜோலார்பேட்டையில் இருந்து  தினமும் சென்னைக்கு நான்கு முறை என ரெயிலில் தலா 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.  பருவ மழை... அதற்கான அறிகுறி... என எதுவும் கண்ணுக்கு தென் படாத நிலையில், நீர் ஆதாரமாக...

தண்ணீர் வருமா? குடங்களுடன் காத்திருப்பு...

சென்னை அடுத்த பம்மலில் குடிநீருக்காக திண்டாடி வரும் பொதுமக்கள், அதிகாலை மூன்று மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து, குடங்களில் தண்ணீரை பிடித்து செல்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதனால்...

தண்ணீர் தட்டுப்பாடு..! எதிர்காலத்தில் சென்னை தப்புமா?

2020 ஆம் ஆண்டு முதல் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றத் தொடங்கிவிடும் என்றும், 2030 ஆண்டில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்பதை உணர்த்துகிறது...

குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாடு குறித்து, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி...

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ. 15,838 கோடியில் திட்டங்கள் - அமைச்சர் SP வேலுமணி

குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவையில் நடைபெற்ற மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடி நடவடிக்கை வேண்டும் - மு.க.ஸ்டாலின்

சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழக முதலமைச்சர் ஈடுபட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றித் துளியும் கவலைப்படா ஆட்சியாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்...

சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை?

சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் கடல்...

முக்கியப் பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்

தமிழகத்தில் நிலவி வரும் முக்கியப் பிரச்சனைகளை பற்றி விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் பஞ்சம், குறுவை சாகுபடிக்கு நீர்திறக்கப்படாதது, கர்நாடக அரசு தண்ணீர் திறக்காதது, “நீட்”...