​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இடைத்தேர்தல் வெற்றி: வெற்றிடம் என கொக்கரித்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கொக்கரித்தவர்களுக்கு இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் அ.தி.மு.க. முற்றுப்புளளி வைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில்...

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணனும் வெற்றிபெற்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் தனபால்...

எம்எல்ஏக்கள் பதவியேற்பை முன்னிட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை

நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்எல்ஏக்களுடன் சென்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.  நாங்குநேரி, விக்கிரவாண்டி எம்எல்ஏக்கள் பதவியேற்பை முன்னிட்டும், "தமிழ்நாடு நாள்" முதல்முறையாக அரசு சார்பில் கொண்டாடப்படுவதை முன்னிட்டும், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை...

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏ-க்கள் நாளை பதவியேற்பு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவியேற்றுக்கொள்கின்றனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில், இவர்கள் இருவரும் எம்எல்ஏக்களாக...

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏக்கள் அக்.29-ல் பதவியேற்பு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் இருவரும் வரும் 29ஆம் தேதி பதவியேற்றுக்கொள்கின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழச்செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்தில்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் புகழேந்தி, ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி,...

இடைத்தேர்தல் வெற்றி: தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாகம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அக்கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். தேர்தல் முடிவுகளில் அதிமுக முன்னிலை பெறத் தொடங்கியது முதலே உற்சாகத்தில் திளைத்த அதிமுக தொண்டர்கள், அதிகாரப்பூர்வமான முடிவுகள் வந்ததும் பட்டாசுகளை வெடித்து இனிப்புகள்...

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் வசமிருந்த தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவின் ராதாமணி, உடல்நலக்குறைவால்...

"இடைத்தேர்தல் வெற்றி... உண்மைக்கு கிடைத்த வெற்றி" - முதலமைச்சர் பெருமிதம்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி, உண்மைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், இந்த வெற்றித் தொடரும் என்றும் கூறியிருக்கிறார்.  இரு தொகுதிகள் இடைத்தேர்தலில், அ.தி.மு.க....

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி பெற்றார்.  விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவின் ராதாமணி, உடல்நலக்குறைவால் காலமானதால், அந்தத் தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன்,...