​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலூர் அருகே ஓடும் ரயிலில் திடீர் புகை

வேலூர் அருகே ஓடும் ரயிலில் திடீரென புகை வந்ததால் உடனடியாக நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வாராந்திர விரைவு ரயில் வண்டி சென்று கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அருகே வந்தபோது, ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து திடீரென புகை ...

தேசிய நெடுஞ்சாலையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செம்மரக் கடத்தல் கும்பல் மோதல்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள் இரு குழுக்களாக கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.குடிமல்லூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி செல்லும் சாலையில் பி.எம்.டபிள்.யூ. உள்ளிட்ட...

அமைச்சரின் பெயரை சொல்லி மணல் கடத்தும் கும்பலின் லாரிகளை மடக்கிய சமூக ஆர்வலர்கள்

வேலூரில் அமைச்சரின் பெயரை சொல்லி மணல் கடத்தும் கும்பலின் லாரிகளை பொதுமக்கள் பிடித்து கொடுத்தும், வட்டாட்சியர் விடுவித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் பாலாற்றில் பட்டப்பகலில் மணல் திருடிச்செல்லும் கும்பல் ஒன்றிற்கு சொந்தமான டாரஸ் லாரியை சமூக ஆர்வலர்கள் மடக்கி பிடித்தனர். மணல்...

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கணவனே கொன்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அருகே தட்டப்பாறையைச் சேர்ந்த பிரபு - வள்ளி ஆகியோருக்குப் பத்தாண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்கெனவே தகராறு...

திருமணம் முடிந்து திரும்பிய போது கார் கவிழ்ந்து மணமகனின் தாய், தந்தை உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திருமணம் நடந்த அன்றே மணமகனின் பெற்றோர் உயிரிழந்தனர். காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், வள்ளியம்மாள் தம்பதியினரின் மகன் சசிகுமாருக்கு நேற்று காலை பெங்களூரில் திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை மணமக்கள் ஒரு காரிலும், உறவினர்கள்...

ரயில் தண்டவாளத்தில் விரிசல் - பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல்

வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வாலாஜாரோடு - முகுந்தராயபுரம் ரயில் நிலையங்கள் இடையே எடப்பாளையம் கிராமத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இன்று காலை 7.30 மணியளவில் ரோந்து சென்றபோது,...

சொத்து தகராறில் தம்பியை வெட்டிக் கொல்ல அண்ணன் முயற்சி - ரத்தம் வெளியேறிய படி நீதிமன்ற வளாகத்துக்குள் ஓடிய தம்பி

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் சொத்து தகராறு காரணமாக சொந்த தம்பியை, நீதிமன்றத்துக்கு வெளியே வைத்து அண்ணன் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் ஜோதிநகரை சேர்ந்த ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கங்காதரனுக்கும், இவரது அண்ணன் சீதாராமனுக்கும் இடையே...

மாணவிகளைப் பிரம்பால் அடித்ததாகத் தலைமை ஆசிரியர் மீது புகார்

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே, மாணவிகளை பிரம்பால் அடித்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். தேவதானத்தில் உள்ள தொடக்கப்பள்ளில், தலைமை ஆசிரியராக உள்ள குப்பாபாய், சரியாக படிக்கவில்லை என்று கூறி, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் சிலரை...

வேலூரில் போலி நகைகள் மூலம் ரூ.28 லட்சம் மோசடி

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் போலி நகைகளை அடகு வைத்து 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி அதிகாரி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் ஆம்பூர் கிளையில் நகை மதிப்பீட்டாளராக இருக்கும் சதிஷ் என்பவர்,...

செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்தின் கிளைக்கு சீல்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த திருவலத்தில் செயல்பட்டு வந்த செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்தின் கிளை  மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது.  காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் முதியோர் இல்லம் அனுமதியின்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதற்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...