​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உத்திரப்பிரதேசத்தின் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு விரிவாக்கம்

உத்திரப்பிரதேசத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், 23 எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 6 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சராக...

அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் ராமர் கோவில் இருந்ததற்கான 12ம் நூற்றாண்டு ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கின் விசாரணையின் போது இந்து அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் லல்லா , முன்பு ராமர் கோவில் இருந்த இடம் இடிக்கப்பட்டு அங்கு பாபர்...

முடியை சாப்பிடும் டிரைகோபேகியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை

உத்தரப்பிரதேசத்தில் தலைமுடியை சாப்பிடும் வினோத நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ முடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதையடுத்து அவர் உயிர்பிழைத்தார். மனநலம் பாதித்தாலோ, எளிதில் உணர்ச்சிவயப்படுபவராக இருந்தாலோ சில குழந்தைகள் டிரைகோபேகியா (Trichopagia) என்ற நோயால்...

நாளுக்கு எட்டு லட்டுக்களை மட்டுமே உணவாக வழங்கும் மனைவி

மந்திரவாதி பேச்சைக் கேட்டு நாளுக்கு எட்டு லட்டுக்களை மட்டுமே உணவாக வழங்குவதாகக் கூறி மனைவியிடம் இருந்து ஒருவர் விவாகரத்து பெற்றுத்தரக்கோரி விண்ணப்பித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மந்திரவாதியிடம்...

மருத்துவமனை வராண்டாவில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால், கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனை வராண்டாவில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரூக்காபாத்திலுள்ள ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்ற கர்ப்பிணி பெண்ணை, போதிய படுக்கைகள் இல்லை...

சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் சாலையில் நின்றிருந்தவர்களை கார் மோதி தூக்கி வீசும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோரக்பூர், மொஹாதிப்பூர் பஜார் பகுதியில் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்த பெண்கள், மற்றும் இளைஞர்கள் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த...

வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு.. மக்கள் கடும் பாதிப்பு..!

பஞ்சாப், அரியானா, இமாசல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பல்வேறு வடமாநிலங்கள் கனமழையின் பிடியில் சிக்கி...

எம்.எல்.ஏ.வால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ்-வில், எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் விபத்தில் சிக்கியது குறித்த விசாரணையை  நிறைவு செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் மேலும் இரண்டு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. வேலை கேட்டு வந்த 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை...

வெள்ளத்தில் தத்தளிக்கும் வட மாநிலங்கள்

வட மாநிலங்கள் கடும் மழை வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.இன்றும் மிக பலத்த மழைபெய்யும் என்று பல்வேறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தலைநகர் டெல்லியில் யமுனா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹாத்திகுன்ட் மதகு திறக்கப்பட்டதால் நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்...

லஞ்சப் பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், இரண்டு போலீஸ்காரர்கள் வாங்கிய லஞ்சப் பணத்தை பங்கு பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியதால் அந்த வீடியோ வைரலாகி விட்டது இதனையடுத்து இரண்டு போலீஸ்காரர்களையும்...