​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவி-உத்தர பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு 2020 முதல் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களை செப்டம்பர் மாதம் சந்தித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விரைவில் அவர்களின்...

முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை 4 வழக்குகள் பதிவு

முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் தற்போது வரை நாடு முழுவதும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து, முத்தலாக் தடைச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி, உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து...

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் முத்தலாக் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத்...

முத்தலாக் தடை மசோதாவை ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரித்தது பற்றி கேள்வி - ஜெயக்குமார் விளக்கம்

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் எடுத்துக் கொள்ளப்படும்போது  அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும் எனக் கூறிய அமைச்சர் ஜெயக்குமார் மக்களவையில் ஓபி ரவீந்திரநாத்  அந்த மசோதாவை ஆதரித்தது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார். இதே போல் அரசியலை பொறுத்தவரை இறக்கம்...

மனைவியை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்த மலேசியாவின் முன்னாள் அரசர்

ரஷ்யாவின் முன்னாள் மாடல் அழகியை திருமணம் செய்த, மலேசியாவின் முன்னாள் அரசர், மும்முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவின் 15வது அரசராக பொறுப்பேற்ற 5ம் சுல்தான் முகமது என்பவர், கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி ரஷ்யாவின்...

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் திங்கட்கிழமை தாக்கல்

முத்தலாக் தடை சட்ட மசோதா மீது மாநிலங்களவையில் திங்கள் கிழமை அன்று விவாதம் நடைபெறவுள்ளதால், தங்கள் எம்.பி.க்கள் தவறாது பங்கேற்குமாறு காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன.  மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை மேற்கொள்ளும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த...

முத்தலாக் மசோதாவை அதிமுக தொடர்ந்து எதிர்க்கும் - தம்பிதுரை

மத்திய அரசு கொண்டுவரும் முத்தலாக் சட்டத்தை அதிமுக தொடர்ந்து எதிர்க்கும் என, மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இஸ்லாமிய சகோதரர்களுக்கு அதிமுக என்றும் அரணாக இருக்கும் என கூறினார்....

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் திங்கட்கிழமை தாக்கல்

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. முத்தலாக் தடை மசோதா, இரு தினங்களுக்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய...

மக்களவையில் முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் பாஜக எம்.பிக்கள் தவறாது சபைக்கு வர கொறடா உத்தரவு

நாடாளுமன்ற மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா மீது வியாழக்கிழமை அன்று விவாதம் நடத்தப்படுவதால், பா.ஜ.க எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் முத்தலாக் அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம்...

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் முத்தலாக் தடை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு கொண்டுள்ளது. ரபேல் விமானம் விலை தொடர்பான சர்ச்சைகளால் நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வரும் நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இந்தக் கூட்டத் தொடரில் முக்கிய...