​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு தூக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, நகைகளை கொள்ளையடித்த வழக்கில், 2 பேருக்கு, தூக்குத் தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில், செவிலியர் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்தார்....

நெல்லையில் கிரேன் ஓட்டுநர் கொலை வழக்கில் 8 பேர் கைது

நெல்லையில் கிரேன் ஓட்டுநர் கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். கரையிருப்பைச் சேர்ந்த கிரேன் ஓட்டுநரான மாசான மூர்த்தி என்பவரை பொங்கல் தினம் முதல் காணவில்லை. அவரது நண்பர் சங்கர் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, பால் கட்டளையில் உள்ள...

வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, வரும் 27 ம் தேதி முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து...

கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள 2 அணு உலைகள் உள்ளன. 2-வது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் 15-ஆம் தேதி...

பொங்கலை ஒட்டி சென்னை- நெல்லை இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,சென்னை எழும்பூரில் இருந்து 10 ஆம் தேதி மாலை 6.50...

வளர்ப்பு நாயின் பாசப்போராட்டம்.. உயிரிழந்த காவலாளிக்காக உயிரைவிட்டது..!

நெல்லையில் தொழிலதிபர் ஒருவரது வீட்டின் காவலாளி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை நெருங்க விடாமல் 4 மணி நேரமாக பாசப்போராட்டம் நடத்திய அந்த வீட்டின் வளர்ப்பு நாய், அதனை அப்புறப்படுத்தும் முயற்சியின்போது பரிதாபமாக உயிரிழந்தது. நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பேருந்து...

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. நெல்லையில் நடந்த குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நெல்லை கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்....

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு...

காலமானார் பிரபல தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜ்

சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜ் திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 81. திருநெல்வேலியை சேர்ந்தவரான டி.செல்வராஜ் வழக்கறிஞராக பணியாற்றியவர். உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் அவர் பணிபுரிந்தார்....

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பணிக்கு சென்றவர்களும் நனைந்தவாறே வீடு...