​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சனி மகாபிரதோஷத்தை முன்னிட்டு வந்தவாசி,திருத்தணியில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

சனி மகாபிரதோஷத்தை முன்னிட்டு வந்தவாசி மற்றும் திருத்தணியில் உள்ள சிவாலயங்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம்...

முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

பழனி மற்றும் திருத்தணி முருகன் கோயில்களில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தசஷ்டியின் முக்கிய...

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அமிர்தலிங்கம்  என்பவரின் மகள் நந்தினி காய்ச்சல் கரணமாக கொத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக...

டெங்குக்காய்ச்சலால் 21 வயது இளம்பெண் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 21 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் 6 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட...

11 பேருக்கு “டெங்கு” அறிகுறி - தீவிர சிகிச்சை

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், திருவள்ளூர் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனைகளில் 11 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து...

825 கிலோ ஜெலட்டின் குச்சிகளை அதிகாரிகள் பறிமுதல்

தமிழக, ஆந்திர எல்லையான திருத்தணி அருகே கல்குவாரியில் விதிகளுக்கு மாறாக வைக்கப்பட்டிருந்த 825 கிலோ ஜெலட்டின் குச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து குவாரிக்கு சீல் வைத்தனர். ஆர்கே பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தியாகபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள ஆந்திர எல்லையோர பகுதியான பாலசமுத்திரத்தில் கல்குவாரி செயல்பட்டு...

திருத்தணியில் களைகட்டிய ஆவணி கிருத்திகை வழிபாடு

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி மாத கிருத்திகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருத்தணி முருகன்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கிருத்திகை விழா களைகட்டும். அந்தவரிசையில், இந்தாண்டு ஆவணி கிருத்திகை தினமான இன்று கிருஷ்ண...

உணவகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருத்தணி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள...

தமிழகத்தில் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை கோலாகலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன... சிவபெருமானின் அருளால் பிறந்த முருகனை, ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. அந்த ஆறு கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்கள் என்ற...

திருத்தணி மலை கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகப் பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடு அமைந்துள்ளது. இங்கு ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த...