​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்குப் பின் சுண்டைக்காய் கட்சிகள் காணாமல் போய் விடும் - திண்டுக்கல் சீனிவாசன்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்குப் பின் சுண்டைக்காய் கட்சிகள் காணாமல் போய் விடும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் சாதனை விளக்க மிதிவண்டிப் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் தங்கமணியும், கே.டி.ராஜேந்திரபாலாஜியும் மிதிவண்டி ஓட்டி பேரணியை தொடங்கி வைத்தனர்....

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜூ இருவரும் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்ததுடன், ஆட்சியர் அலுவலகத்தில் விலை இல்லா மூன்று சக்கரவாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கினர்....

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தற்போதைக்கு திட்டம் இல்லை : கமல்

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தற்போதைக்கு திட்டம் எதுவும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது நியாயமான விலை குறைப்பு செய்யப்பட வேண்டும்...

வரும் டிசம்பர் மாதத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ?

திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ போஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆம் தேதி இறந்தார். இதேபோல, திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த...

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் காலமானார்

மாரடைப்பால் காலமான திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  ஏ.கே.போசுக்கு நேற்று இரவு திடீரென  மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அவரை அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே...

திருப்பரங்குன்றம் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா இன்று முதல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி மூலவர் சன்னதியின் முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் நந்தி பகவானின்...