​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லக்னோவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்

உத்தரப்பிரதேசம் லக்னோவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திச் சட்டமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத அரசைக்...

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

பணிநிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் போராடி வந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். கடந்த 4 நாட்களாக அவர்கள், டிபிஐ வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்...

மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க கோரி முதுகலை ஆசிரியர்கள் போராட்டம்

NEET, JEE போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முதுகலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். NEET, JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, நாமக்கல் மாவட்டத்தில் 285 முதுகலை ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பயிற்சி...

ஜம்மு காஷ்மீரில் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி ஆசிரியர்கள் போராட்டம்

ஜம்மு காஷ்மீரில்  7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல முறை கோரிக்கை விடுத்தும் அதனை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன் வராததால் ஆசிரியர்கள் தெருவுக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர்...

கலந்தாய்வு நிகழ்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஆசிரியர்கள் நள்ளிரவு வரை தர்ணா போராட்டம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலந்தாய்வு நிகழ்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஆசிரியர்கள் நள்ளிரவு வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விழுப்புரம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை வரை கலந்தாய்வு நடைபெறவில்லை. பலமணி நேரம் காத்திருந்த...

அமெரிக்காவில் ஊதிய உயர்வு, பள்ளிகளுக்கு கூடுதல் நிதி கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டத்தில் குதித்த பள்ளி ஆசிரியர்கள்

அமெரிக்காவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டில் கொலராடோ, மேற்கு விர்ஜினியா,  கென்டகி உள்ளிட்ட மாகாணங்களில் ஆசிரியர்களின் போராட்டங்கள் அரங்கேறின. ஊதிய உயர்வு கோருவது மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டுமெனவும் அவர்கள்...

சென்னையில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னையில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், செங்கோட்டையன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறையை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நான்கு...

சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - அமைச்சர் செங்கோட்டையனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னையில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  தமிழக பள்ளி கல்வித்துறையை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை...

இடைநிலை ஆசிரியர்கள் மூன்றாம் நாளாக உண்ணாவிரதம்

சமவேலைக்குச் சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்திச் சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மூன்றாம் நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ஊதியத்தில்...

சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2012-ஆம் ஆண்டுக்கும் முன்பும் பின்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய விகிதத்தில் முரண்பாடு இருப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரே பணிக்கு ஒரே...