​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை - தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை என்றும், தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்....

அரசு மழலையர் பள்ளிகளில் கே.ஜி. வகுப்புக்களுக்கு நேர அட்டவணை

தமிழக அரசு மழலையர் பள்ளிகளில் கே.ஜி. வகுப்புக்களில் மாணவர்கள் தூங்குவதற்கு, இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது....

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில உள்ள மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறும். இங்கு, காலை முதலே நிலவிய பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். திருவாரூர் மற்றும்...

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு

குஜராத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிறிய தீவில் அமைக்கப்படும் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய்...

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள் சிலவற்றைத் தற்போது காண்போம்... திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் அகோரகாளி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அகோரகாளி, அஷ்டகாலபைரவர் உள்ளிட்ட தெய்வங்கள் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அகோரிகள் தங்கள் உடம்பில்...

ஜகர்தாவில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகப் பெண்

ஜகர்தாவில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற சத்தியமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை சாதனை படைத்துள்ளார். சத்தியமங்கலம் அடுத்துள்ள நாகரணை கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது மகள் ரம்யா, இடது கைவிரல் குறைபாடு உள்ள இவர், தற்போது...

நடைபயிற்சியின் போது சி.விஜயபாஸ்கர் தன்னை சந்தித்ததாக தினகரன் பேட்டி

சுகாதாத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடைபயிற்சியின் போது தன்னை சந்தித்து குறைகளைக் கூறியதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தனக்கு வணக்கம் கூறிய விஜயபாஸ்கர், பின்னர் நின்று பேசியதாகவும்,...

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகாரில் முதலமைச்சருக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை, லஞ்ச ஒழிப்புத்துறை திட்டவட்டம்

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள், பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றுக்கு டெண்டர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கும், அவருக்கு வேண்டிய நிறுவனங்களுக்கும் வழங்கியதாக திமுக குற்றஞ்சாட்டியது. இவ்வாறு...

குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை

குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சேலத்தில் நேற்று கடுமையான வெயில் வாட்டிய நிலையில், இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி,...

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு , மழை படிப்படியாக குறையும்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழக பகுதியில் மழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை தகவல்....