​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இன்று சர்வதேச தாய்மொழி தினம்..உருவானது ஏன் ??

உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் அந்தமொழிக்கே உரிய தனித்தன்மையுடன் சிறந்து  உள்ளன.மனித சமூகத்தின் ஒவ்வொரு இனத்திற்கும் தன்னுடைய தாய்மொழி அடையாளமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட தாய் மொழியை பாதுகாக்க யுனெஸ்கோ அமைப்பால் உருவாக்கப்பட்டது தான் சர்வதேச தாய் மொழி தினம். அன்றைய பாகிஸ்தானில் 1952ல்...

இலங்கையில் சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் இசைக்கத் தடை - மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இலங்கை சுதந்திர தின விழாவில் இனி தமிழில்...

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க முதலமைச்சரிடம் வேண்டுகோள்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்துவதற்கும், உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டத்துறை...

47.18 லட்சம் பேர் பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வு - ரயில்வே அமைச்சர் தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் 47 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநில மொழிகளில் ரயில்வே வாரிய தேர்வுகளை எழுதியிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ரயில்வேயில் நேரடி ஆளெடுப்புக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மற்றும் 13 மாநில மொழிகளில் நடைபெறுவதாக அந்த துறையின் அமைச்சர் பியுஷ் கோயல் மக்களவையில்...

"எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை"

தமிழ் மொழிக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து கொடுத்து வருவதாகவும், எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்தி பிரசார...

நடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்

தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். கடல் அலைகளில் கால்நனைத்து,...

தமிழ்மொழி அழகானது - தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்...

தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார். மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட மோடி, கடல் அலைகளில் கால்நனைத்துக்...

தமிழை ஆட்சி மொழியாக்கி பெருமைப்படுத்துங்கள் - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி, தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய, இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், 8 கோடிக்கும்...

தமிழை புறக்கணிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடவில்லை - பன்னீர்செல்வம்

தமிழை புறக்கணிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் தமிழக அரசின் துணைக்கோள் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இந்த திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் துவக்கப்பட உள்ள நிலையில் அதுகுறித்து ஆய்வினை ஓ.பன்னீர்...