​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆன்லைன் மூலம் ரூ.20க்கு மாற்று ரேஷன் கார்டு பெறும் வசதி

இணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு பெறும் வசதி தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேசன் கார்டுகளை தொலைத்தவர்களும், பெயர், முகவரி போன்றவற்றை திருத்தம் செய்ய விரும்புபவர்களும்...

ஜெயலலிதா நினைவிடத்தை பிப்ரவரி 24- ஆம் தேதி திறக்க முடிவு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பிப்ரவரி 24- ஆம்தேதி திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 58 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது. 10 பகுதிகளாக...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அமைச்சர்கள் மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தலைவர் எனும் அர்த்தத்தில் நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷாரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர். இரண்டாம் உலகப் போர்...

பொது இடத்தில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் - தமிழக அரசு அரசாணை

பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனி தனியே கட்டண...

தனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

தனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சங்க பொதுச்செயலாளர் முகம்மது அலி, கடும் நஷ்டத்தில் உள்ள ஆவின்...

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதித்து அறிக்கை அளிக்க உத்தரவு

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான நீதிபதி கிருபாகரன் கடிதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இன்றைய விசாரணையின் போது, யுனெஸ்கோவால் புராதன...

தூத்துக்குடி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கியதற்கு எதிரான மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், தூத்துக்குடி மேயர் பதவியை, பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து 2011ஆம் ஆண்டு உத்தரவு...

ஜன.26-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை கூட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

இந்த ஆண்டிற்கான முதல் கிராம சபைக் கூட்டத்தை ஜனவரி 26ம் தேதி நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடந்து...

தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள்...

தமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கெளரவித்தார். விழாவில் தமிழ் அறிஞர் ந. நித்யானந்த பாரதிக்கு  திருவள்ளுவர் விருதும், முனைவர் ப. சிவராஜிக்கு மகாகவி பாரதியார் விருதும்,  செஞ்சி ந. இராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதும்...

தமிழகம் முழுவதும் 98.5 சதவீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 98 புள்ளி 5 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அனைத்து ரேசன் கடைகளிலும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு,...