​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் குடிமராமத்து பணிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 265 ஊராட்சிகளில் மொத்தம் ஆயிரத்து 525 குளங்கள் உள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 824 குளங்களை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிமங்கலத்தில் உள்ள குளம்...

கங்கை கொண்ட சோழபுரம் கோவில் அருகே நான்கு வழிச்சாலை

கங்கை கொண்ட சோழபுரம் கோவில் அருகே நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை மூன்று வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தொல்லியல் துறை மற்றும் யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு...

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214-வது நினைவு நாள்

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214-வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.  ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர், தீரன் சின்னமலை. இவரின்...

ஊரகப்பகுதிகளில் போக்குவரத்தினை மேம்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் போக்குவரத்தினை மேம்படுத்த ஆயிரத்து 50 பாலங்கள் கட்டுவதற்காக 147 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கடந்த 8ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்...

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க தவறினால், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுக்கு என தனியாக காவலர்கள் இல்லாததால் ஆணவக்...

மொச்சையைத் தாக்கும் வைரஸ்

தேனி மாவட்டத்தில் மானாவாரிப் பயிரான மொச்சையில் வைரஸ் நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பெரியகுளம்,தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, மேல்மங்கலம், குள்ளப்புரம்,ஆண்டிப்பட்டி, பாலக்கோம்பை, கண்ணியபிள்ளபட்டி, புலிமான்கோம்பை, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மானவாரி பயிரான மொச்சைப் பயிர்...

மழைநீரை சேமிக்கும் சரியான திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை - உயர்நீதிமன்றம்

மழை நீரை சேகரித்து வைக்க தமிழக அரசிடம் போதுமான திட்டங்கள் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உலக வங்கி நிதியுதவியுடன் 1,101 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது....

2025க்குள் தமிழகத்தை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்ற இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்

2025-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றுவது தொடர்பான விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம் சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர்...

கக்கன், நல்லகண்ணு குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்படும் - தமிழக அரசு

தியாகத்தால் புகழ் மிக்க கக்கன் மற்றும் நல்லகண்ணு குடும்பங்களுக்கு விரும்பிய இடத்தில் வாடகை இல்லாத வீடு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அண்மையில் நல்லகண்ணு தமது வீட்டை ஒப்படைத்த விவகாரம் குறித்து...

வழக்கத்தில் இல்லாத, 141 பழைய சட்டங்களை நீக்க சட்ட மசோதா

தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சில சட்டங்களின் பட்டியலை அனுப்பி, அதில் எந்தெந்த சட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் பயன்பாட்டில்...