​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வங்கிக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் லாக்கரில் இருந்து 2 டம்மி துப்பாக்கிகள் பறிமுதல்

மன்னார்குடி வங்கிக் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மணப்பாறை மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் ஊழியரின் லாக்கரில் இருந்து 2 டம்மி துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. அசேஷமில், மெர்க்கண்டைல் வங்கி கொள்ளை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மரியசெல்வம் என்பவர் மணப்பாறை வங்கிக்...

TMB வங்கியில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மணப்பாறை TMB வங்கி ஊழியரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மணப்பாறையை சேர்ந்த அந்த வங்கியின் ஊழியர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மன்னார்குடியை அடுத்துள்ள அசேஷம் கிளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்...

திருவொற்றியூர் நந்தி ஓடை குடியிருப்புப் பகுதியில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீர்

சென்னையை அடுத்த திருவொற்றியூர் நந்தி ஓடை பகுதியில் தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் நந்தி ஓடை வடக்கு மாட வீதி, மேற்கு மாட வீதி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக...

அரசு மருத்துவமனையில் போதிய இட வசதியில்லாததால் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் அவதி

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு போதிய இட வசதியில்லாததால் வெயிலில் அவர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி, ஒசூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் இருந்து உள் நோயாளிகளாவும்,...

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் - சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

தேனி மாவட்டம் தேவாரம் அருகே, 1,500 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகம் குறித்து பார்க்கலாம். தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே அம்பரப்பர் மலைப்பகுதியில், ஐஎன்ஓ எனக்குறிப்பிடப்படும் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நியூட்ரினோ என்பது அணு அடிப்படைத்துகள்களில்...

பஞ்சாபில் ஊதிய உயர்வு கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் போராடிய ஆசிரியர்கள் மீது தடியடி

பஞ்சாபில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 7 ஆயிரம் ஆசிரியர்கள் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லூதியானா அருகே...

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சிக்கு எதிராக யூதர்கள் போராட்டம்

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பினுக்கு எதிராக அந்நாட்டில் வசிக்கும் யூதர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் எதிரே நடந்த இந்தப் போராட்டத்தில் ஜெரேமியின் யூத எதிர்ப்பு முறையைக் கைவிடவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து பாடல்களைப்...

சென்னை இரும்புக் கடை கொள்ளை வழக்கில் ஊழியர் உள்பட 4 பேர் கைது - ரூ.40 லட்சம் பறிமுதல்

சென்னை மண்ணடியில் உள்ள இரும்புக்கடையில் 52 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கடையின் ஊழியரே தமது நண்பர்கள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவில் இந்தியன் ஸ்டீல் ட்ரேடர்ஸ் என்ற இரும்புக்கடை உள்ளது. சலீம் என்பவருக்கு சொந்தமான...

தனிநபர் தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பகிர்வதாக பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு பா.ஜ.க. பதிலடி

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிப்பது தொடர்பாக பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது.  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல் சில வாசகங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமது...

ஆம்ஆத்மி MLA கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

https://www.youtube.com/watch?v=UhpZKZ6J35oடெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது.ஆதாயம் தரும் பதவியில் இருந்ததாக எழுந்த புகாரையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து குடியரசு தலைவர்...