​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்திய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்த விவரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை...

முதலமைச்சருடன் புதிய தலைமைச் செயலாளர் சண்முகம் சந்திப்பு

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்க உள்ள சண்முகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது....

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம்

தமிழக காவல்துறையின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக் காலம் வரும் 30-ந்தேதியுடன் நிறைவடைகிறது. புதிய டிஜிபி ஆக நியமிக்கப்படப்போவது யார் என கேள்வி எழுந்த நிலையில்,...

போக்குவரத்து ஒழுங்குபடுத்துதலில் புதிய தொழில்நுட்பங்களை துவங்கி வைத்தார் முதலமைச்சர்

போக்குவரத்து ஒழுங்குபடுத்துதலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும் வகையில், மின்னனு பரிவர்த்தனை மூலம் அபராதம் வசூலிப்பதற்கான கையடக்கக் கருவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான பணப்பரிவர்த்தனையற்ற மின்னணு கட்டண ரசீது வழங்கும்...

டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்

டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ((Gfx in)) குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து, டி.கே.ராஜேந்திரன் பதவிநீட்டிப்பு பெற்றுள்ளதாகக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. 2017 நவம்பரில் வருமானவரித்துறை...

இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை CBCIDக்கு மாற்றி DGP T.K.ராஜேந்திரன் உத்தரவு

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்திய வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை முகநூல் மூலம் காதல் வலையில் வீழ்த்தி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. தங்களிடம் சிக்கிய...

பணியிடத்தில் செல்ஃபோன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை - டி.கே.ராஜேந்திரன்

பணியிடத்தில் செல்ஃபோன் பயன்படுத்தும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பல காவலர்கள் பணியின் போது தேவையின்றியும் அளவுக்கு அதிகமாகவும் செல்ஃபோன் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். இதனால் பணியில் தகவலை பெறுதல்,...

டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை சட்டவிரோதம் என அறிவிக்கவும் புதிய டி.ஜி.பியை...

அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 35 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

குட்கா முறைகேடு வழக்கில்  35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் பான் மசாலா, குட்கா ஆகியவற்றை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் கடந்த 2013ஆம் ஆண்டு தடை...

அமைச்சர் விஜயபாஸ்கர், DGP டி.கே.ராஜேந்திரன் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்

குட்கா ஊழல் புகாரில் சி.பி.ஐ. சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை  டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு தமிழகத்துக்கே தலைக்குனிவு என்று அவர்...