​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி !

காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததையொட்டி, பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரை சந்தித்த விவசாயிகள், பூங்கொத்து அளித்தும், சால்வை அணிவித்தும் மரியாதை...

குடியுரிமை சட்டம் கொண்டுவர மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இல்லை - மத்திய சட்ட அமைச்சர்

குடியுரிமை தொடர்பாக சட்டம் கொண்டுவர மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை தொடர்பாக எந்த சட்டம் நிறைவேற்றவும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக விளக்கம் அளித்தார்....

நாட்டின் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்திற்கு மூன்றாவது இடம்

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடும் நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில்“கேரளா 70 மதிப்பெண்களுடன் முதலிடத்தைத்...

அரசு பணிகள் டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

அரசு பணிகள் டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கூட்டம் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இ-ஆபீஸ் எனப்படும் அரசு பணிகள் டிஜிட்டல் மயமாக்கல், மின்னணு நிர்வாகம் உள்ளிட்ட பணிகள்...

GST வருவாயை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக நிதியமைச்சர் பேட்டி

ஜிஎஸ்டி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு 35,298 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில், ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய...

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!

குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத்...

மாமல்லபுரத்தை பாதுகாக்க எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தர உத்தரவு

தமிழகத்தின் புராதான நகரமான மாமல்லபுரத்தை அழகுபடுத்தி, பாதுகாக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை...

"தண்டனையிலிருந்து தப்பவே முடியாது" உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

விவசாய கழிவுப் பொருள்கள் எரிக்கப்படும் விவகாரத்தில் விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள்...

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டெங்கு காய்ச்சலுக்கு சென்னையை சேர்ந்த 6 வயது குழந்தை பலியாகியிருப்பது வேதனை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

பிளாஸ்டிக் - மாநில அரசுகளுக்கு கெடு..!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பைகளின் உற்பத்தியை நிறுத்த அக்டோபர் 2ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை...