​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உணவுப் பாதுகாப்புத்துறை சோதனையில் 2 டன்னுக்கு மேல் குட்கா பொருட்கள் சிக்கின

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் 2 டன்னுக்கு மேல் குட்கா பொருட்கள் சிக்கியுள்ளன. தாடிக்கொம்பை அடுத்த கிரியம்பட்டி கிராமத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட உணவுப்...

பிஜு ஜனதாதள முன்னாள் எம்பி ஜெய்பாண்டாவின் ஹெலிகாப்டர் பறிமுதல்

பிஜு ஜனதாதளக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய் பாண்டாவின் ஹெலிகாப்டரை ஒடிசா காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஒடிசாவின் கேந்திரப்பாரா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெய்பாண்டா கடந்த ஜனவரி மாதம் பிஜு ஜனதாதளக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  ஜெய்பாண்டா சுற்றுலாத் தலமான...

திருவொற்றியூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 26 லாரிகள் பறிமுதல்

சென்னை, திருவொற்றியூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த தனியார் நிறுவன மேலாளர், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவொற்றியூர், விம்கோ நகரில் விக்டோரியா எஸ்டெட் என்ற நிறுவனம், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை ஒப்பந்த...

புழல் சிறையில் இருந்து 20 டி.விக்கள், 40 ரேடியோக்கள், 4 மிக்ஸிக்கள் பறிமுதல் என தகவல்

புழல் சிறையில் உயர்பாதுகாப்பு கைதிகள் பிரிவில் நீடித்துவரும் சோதனையில் தற்போது மேலும் பல பொருட்கள் சிக்கியுள்ளன.  குண்டுவெடிப்பு, கள்ளத்துப்பாக்கி கடத்தல், மதத்தலைவர்கள் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது அங்கு...

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து வந்த மொஹம்மத் இர்ஷாத் என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்ட போது அவர் மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்க...

லஞ்சப் புகாரில் கைதான போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்...

லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25...

கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்

லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 35 லட்சம் ரூபாய் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள பாபு...

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் ஐம்பொன்சிலை, தங்க நகைகள் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற திக்குறிச்சி மகாதேவர் கோவிலின் பூட்டை உடைத்துப் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள், தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு சிவாலயங்களில் இரண்டாவதாக விளங்குவது திக்குறிச்சி மகாதேவர் கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில் இன்று காலை...

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சென்னை கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்துள்ளனர். கோயம்பேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற கண்டெய்னர் லாரியை சோதனை செய்த போலீசார், அதில் இருந்த...

திட்டக்குடி அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மணல் கடத்திய 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் சேலம் நெடுஞ்சாலையில் மணல் ஏற்றி வந்த லாரிகளை மறித்து சிறுபாக்கம் போலீசார் சோதனை செய்தனர். உரிய அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்ததை...