​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்கார் சர்ச்சை... விசாரணைக்குத் தடை...

சர்க்கார் திரைப்படம் விவகாரம் தொடர்பாக, காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தில், அரசின் இலவச திட்டங்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதை தொடர்ந்து முருகதாஸ் மீது நான்கு பிரிவுகளில், சென்னை...

ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

சர்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச பொருட்கள் திட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு...

சர்கார் திரைப்படத்தில் அரசின் திட்டங்களை அவதூறு செய்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சர்கார் திரைப்படத்தில் அரசின் நலத் திட்டங்களை தவறாக விமர்சித்ததாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.GFX IN  விஜய் நடித்த சர்கார் படத்தில் அரசின் நல திட்டங்களை சர்ச்சைக்குரிய வகையில்...

சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம்  வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தொடர்புடைய திரையரங்குகளின் உரிமத்தை ரத்துசெய்ய நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டதாகவும், அது முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்திருந்த மனுதாரர்,...

விஜய்-யின் ரசிகர்கள் எனக்கூறி கொண்டு வீடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது

சர்க்கார் பட சர்ச்சையின்போது, விஜய் ரசிகர்கள் எனக்கூறி, அரிவாளை கையில் வைத்துக் கொண்டு, கீழ்த்தரமான வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்ட புகாரில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்... இதுதொடர்பாக ஜி.பிரகாஷ் குமார் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த...

சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு மதுரையில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதலில்...

கிணறு வெட்டுன ரசீதும்..தணிக்கை சான்று ரஜினியும்..: நமது அம்மா கட்டுரை

சர்கார் படத்துக்கு ரஜினி வக்காலத்து வாங்கலாமா? எனக் கேட்டு அதிமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. தணிக்கைச் சான்று தந்த பின், படத்தை எதிர்த்துப்போராடுவது நியாயமா? என ரஜினி கேட்டதை சுட்டிக்காட்டி, தரமானது என சான்றளித்த...

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய நவ.27 வரை தடை

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய வரும் 27-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  சர்கார் திரைப்படத்தில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சி இருப்பதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார்...

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

அ.தி.மு.கவினரின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. சர்க்கார் படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லியை எதிர்மறையாக பயன்படுத்தியிருப்பதாகவும், இலவச திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் காட்சி இருப்பதாகவும்...

விஜய் ரசிகர்கள் என கூறிக் கொண்டு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட இருவர்

சர்கார் படத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை ஆபாசமாக பேசி விஜய் ரசிகர்கள் என கூறிக் கொண்டு இருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  மேலும் விஜய் பட பேனர்களில் இனி கை வைத்தால் அ.தி.மு.கவினருக்கு கைகள் இருக்காது...