​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி ரங்கநாயகி அம்மாள் காலமானார்

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி ரங்கநாயகி அம்மாள் சேலத்தில் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சேலம் அருகே பூலாவரியில் இருக்கும் அவரது இல்லத்தில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்...

விவசாயியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கட்டிப் போட்டு அடித்து துவைத்த பொதுமக்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விவசாயியிடம் இருந்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்த இருவரை பொதுமக்கள் பிடித்து கட்டிப் போட்டு தரும அடி கொடுத்தனர்.  மல்லிப்பாளையத்தைச் சேர்ந்த துரைச்சாமி என்பவர் வங்கியில் 57 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்...

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினால் எவ்வித தாக்கமும் ஏற்படாது - தமிழிசை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினால் தமிழகத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்....

எடப்பாடி அருகே சிறப்பு மனு நீதி நாள் முகாமில் ஆட்சியர் ரோஹினி பங்கேற்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி திட்ட முகாமில் ஆட்சியர் ரோஹினி கலந்து கொண்டார். பக்கநாடு கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வந்த அவர் அங்குள்ள பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் முகாமுக்கு வந்த ரோகினி, அங்கு...

உரிய அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்தல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 20 டன் எடையுள்ள கிரைனைட் கற்களை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓமலூரை அடுத்த எம்.செட்டிபட்டி பிரிவு அருகே சேலம் மாவட்ட கனிம வளதுறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

ஏற்காட்டில் மலையேற்றத்திற்கு வனத்துறை தடை

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலையேற்றத்திற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஏற்காட்டிலும் மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர்...

சேலத்தில் 550பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார் முதலமைச்சர்

சேலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 550பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார். மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 550...

சேலம் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை - கொலையாளிகள் 3 பேர் 5 மணி நேரத்தில் கைது

சேலம் அருகே பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த கொலையாளிகளை 5 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். வலசையூர் பாக்யம் நகரை சேர்த்த சங்கர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை...

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை

சேலம் அருகே, கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். வலசையூரில் கடந்த 2012ல் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் கைதானார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கர், அண்மையில்...

ஓமலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஓமலூரை அடுத்த நாலுகால்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததைக் கண்ட செந்தில்குமார் என்பவர் , சேலம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து...