​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரே நேரத்தில் டாஸ்மாக் ஆதரவு, எதிர்ப்பு போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஒரேநேரத்தில் டாஸ்மாக் கடைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்னிமேடு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பலர் பிற்பகலில் கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....

ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள 74 கிலோ கஞ்சா பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் தன் பாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் அதிவிரைவு ரயிலில் தொடர்ந்து கஞ்சா...

புதிய மாவட்டமாக உருவாகியுள்ள ராணிபேட்டையில் உள்ள 29 தொழிற்சாலைகளுக்கு அபராதம்

அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டதாக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 29 தொழிற்சாலைகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 6 கோடியே 88 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அங்குள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு...

ராணிப்பேட்டை அருகே பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து மோதிக் கொண்ட 9 வாகனங்கள்

ராணிப்பேட்டை அருகே வாலாஜப்பேட்டையில் பனிமூட்டம் காரணமாக 9 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்தனர். சுங்கச்சாவடி அருகே மேம்பாலத்தில் வழக்கத்தை விட அதிகமாக பனிமூட்டம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னே சென்ற வாகனம் அருகில் சென்ற போதுதான்...

செல்போன் பேசிக்கொண்டே நோயாளிக்கு ஊசி போடும் செவிலியர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செல்போன் பேசிக்கொண்டே நோயாளிக்கு செவிலியர் ஒருவர் ஊசி போடும் காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்பனா என்ற அந்த செவிலியர், காலை மருத்துவமனை வந்த நோயாளி ஒருவருக்கு செல்போன் பேசிக்கொண்டே ஊசி போடும் காட்சியை...

சந்தனம், ஜவ்வாது மணக்கும் திருப்பத்தூர்..! தொழில் நிறைந்த ராணிப்பேட்டை..! புதிய மாவட்டங்களின் சிறப்புகள்

சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது. தொழில் நிறைந்த மாவட்டமாக ராணிப்பேட்டை உருவெடுத்துள்ளது.  வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாகியிருக்கும் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகியவை நிர்வாக ரீதியில் பணிகளை தொடங்கி உள்ளன. திருப்பத்தூர் பெரிய மலைகளால் சூழப்பட்டுள்ளது....

திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்கள் இன்று புதிதாக உதயம்...

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்... வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, வேலூர் மாவட்டமானது, வேலூர்,...

5 புதிய மாவட்டங்கள் உதயம், தமிழ்நாடு அரசு அரசாணை..!

செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி  ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. மேலும், புதிய தாலுகா விவரங்களையும், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.  காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,...

ராணிப்பேட்டை அருகே மாயமான 10ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை தேடும் பணி தீவிரம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே மாயமான 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  சிப்காடு அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் நவீன்குமார், மோகன்குமார், தருஷ்குமார் படிப்பில் பின்தங்கியிருந்ததால் ஆசிரியர்கள் கண்டித்ததாக...

2 மாதத்திற்குள் அனைத்து கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் - திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ்

இரண்டு மாதத்திற்குள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும் என ராணிப்பேட்டையின் சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட திவ்ய தர்ஷினி உறுதி அளித்துள்ளார். புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டமான ராணிப்பேட்டைக்கு,  திவ்யதர்ஷினி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராணிப்பேட்டை பயணியர் மாளிகையில்...