​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் கனிமொழி சந்திப்பு....

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இலங்கை சென்ற கனிமொழி தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் பிரதமர்...

பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 260 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர்...

ஆந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தனது கொடியை பாஜக ஏற்றும் - பிரதமர் மோடி

ஆந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தனது கொடியை பாஜக ஏற்றும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  மாலத்தீவு பயணத்தை முடித்து கொண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு, கொழும்புவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்குப்...

இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இலங்கை சென்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் கொழும்பில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்தை அவர் பார்வையிட்டார்.  மாலத்தீவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி, இன்று காலை இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில்...

மீண்டும் பிரதமரான பின்னர் முதல் வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார் மோடி..!

பிரதமர் மோடி அடுத்த இரு நாட்களில் இரண்டு கோவில்களில் தரிசனம் செய்வதோடு, இரு நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் அவர் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையும் ஆற்றுகிறார்.  பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக மாலத்தீவுக்கும், அதனை அடுத்து...

ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடிய அச்சுறுத்தல் இன்னும் உள்ளது

இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடிய அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகையன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்ததுடன், 500 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு தொடர்பான விவாதத்தில் பேசிய...

திருப்பதியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தரிசனம்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை திருப்பதி வந்த ரணில் விக்கிரமசிங்கே திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று ரணில்...

இலங்கையில் காவல்துறையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் அதிபர் சிறிசேன

இலங்கையில் காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் அதிபர் மைத்ரிபால சிறிசேன கொண்டு வந்துள்ளார். இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பெற்று, 9 நாட்கள் கடந்த நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் காவல்துறையை, தான் வகிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சிறிசேன...

மீண்டும் இலங்கை பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமராக, ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26ஆம் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தார்....

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ராஜபக்சே

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகியுள்ளதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இலங்கைப் பிரதமராக ராஜபக்சேவை நியமித்த அதிபர் சிறிசேனா அதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.  இதற்கு எதிரான வழக்கில் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என...