​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மெட்ரோ ரயில்களில் சுமார் 4 மணி நேரம் இலவச பயணம் மேற்கொண்ட பயணிகள்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 4 மணி நேரம் இலவசமாக பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்திலும், பயணச்சீட்டு எந்திரங்களில் காலை 6 மணி முதல் கோளாறு...

திருச்சி அருகே 3 மணி நேரமாக ரயில்கள் நிறுத்தம்

திருச்சி அருகே பராமரிப்பு பணி காரணமாக 3 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாயினர். கரூர் மார்க்கத்தில் செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது. பாலக்கரை ரயில் நிலையத்தை கடந்து 10 நிமிடங்களில் கோட்டை ரயில்...

ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை இடிந்து இருவர் உயிரிழப்பு

கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இந்தக் கட்டிடத்தின் மேற்கூரை அதிகாலை 3.30 மணியளவில் திடீரென சரிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும்...

குன்னூர் ரயில் நிலையம் அருகே சுற்றி வரும் காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ரண்ணிமேடு ரயில் நிலையம் அருகில் சுற்றி வரும் காட்டு யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரண்ணிமேடு ரயில் நிலையப் பகுதியில் பேரிக்காய், பலாப்பழங்களை உண்பதற்காக யானைகள் கூட்டம் அவ்வப்போது வந்து செல்கிறது. இந்நிலையில்...

தண்டவாளத்தில் ஓடிய நாயால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

லண்டனில் நாய் ஒன்றின் செயலால் வாட்டர் லூ ரயில்நிலையத்தில் 24 நடைமேடைகள் மூடப்பட்டன. வாட்டர் லூ ரயில் நிலையத்துக்கு தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்த ஒரு உரிமையாளரின் பிடியில் இருந்து நாய் நழுவிச் சென்று தப்பியது. அது தண்டவாளத்தில் பாய்ந்து பாய்ந்து ஓடிவிட, அதைத்...

அனந்தபுரி ரயில் பயோ டாய்லெட் அமைப்பில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பெண்

மதுரை ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயிலில் இருந்து அவசரமாக இறங்கிய பெண் தண்டவாளத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். சென்னையில் இருந்து கொல்லம் சென்ற அனந்தபுரி விரைவு ரயில் அதிகாலை 4.50 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் நின்றது. மதுரை ரயில் நிலையத்தில்...

ரயில் நிலையங்களில் ஆப்பரேசன் ஆம்லா என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை

நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும், அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆப்பரேசன் ஆம்லா என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை...

கிக் பாக்ஸர் கொலையில் 9 பேர் சிக்கினர்

சென்னை அம்பத்தூரில் மதுக்கடையில் ஆட்டோ ஓட்டுநர் கொலையில் தொடர்புள்ள 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிக் பாக்ஸரான ஆட்டோ ஓட்டுனரை ஒரு மாதம் கண்காணித்து கொன்ற சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே ஹரிதாஸ் என்பவர்...

ரயிலுக்காக காத்திருந்தபோது பிரசவித்த கர்ப்பிணி பெண்

மகாராஷ்ட்ர மாநிலத்தில், கன மழையால் மருத்துவமனை செல்ல வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில் நிலையத்திலேயே குழந்தை பிறந்தது. அந்த மாநிலத்தின் மும்பைக்கு அருகே உள்ள  தாம்பிவ்லி ரயில் நிலையத்துக்கு வந்த ஜாஸ்மின் சபிர் சேக் எனும் கர்ப்பிணி பெண், ரயிலுக்காக காத்திருந்தார். நீண்ட...

ரயில் விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய பயணி

மகாராஷ்ட்ராவில், ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த நபர், அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்தப்பும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் கவனம்பெற்றுவருகிறது. அசாங்காயோன் ரயில் நிலையத்தின் நடைமேடையிலிருந்து கீழே இறங்கிய அவர், தண்டவாளத்தின் குறுக்கே கடந்து மறுபுறம் செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது...