​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உயர்மட்ட ஊழல் பட்டியலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : ரகுராம் ராஜன்

உயர்மட்ட அளவில் நடந்துள்ள ஊழல்களின் பட்டியலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியும்,  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நாடாளுமன்ற குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். வாராக்கடன் அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்குமாறு முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான...

வங்கிகளில் வராக்கடன் அதிகரிப்புக்கு ஐ.மு.கூட்டணி ஊழலே காரணம் - ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்

வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு, தகுதி இல்லாத, ஊழல் மலிந்த வங்கிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். வங்கிகளின் வராகடன் 10 லட்சம் கோடி...

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு - ராஜீவ் குமார்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கைகளால்தான் என்றும், பண மதிப்பிழப்பால் அல்ல என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 2016நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து நாட்டின் பொருளாதார...

வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையைத் தீர்க்க ரகுராம்ராஜனிடம் யோசனை கேட்க நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு

வங்கிகளின் வாராக்கடன் சிக்கலை தீர்ப்பதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனிடம் யோசனை கேட்க நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த...

இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை - ரகுராம் ராஜன் விளக்கம்

இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் காலியாகும் இங்கிலாந்து வங்கி ஆளுநர் பதவிக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுவது...

இங்கிலாந்து வங்கி தலைவராக ரகுராம் ராஜன் பொருத்தமானவர் - வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டு இங்கிலாந்து இதழ் புகழாரம்

இங்கிலாந்து வங்கியின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளவர்கள் என, லண்டன் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து வங்கியின் தற்போதைய தலைவரான, கனடாவை சேர்ந்த Mark Carney அடுத்தாண்டு பதவி ஓய்வு...

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை நல்லதல்ல என்று பிரதமரிடம் கூறினேன் - ரகுராம்ராஜன்

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்துவது நல்லதல்ல என்று பிரதமர் மோடியை தாம் எச்சரித்ததாக, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் உள்ள ஹாவார்ட் கென்னடி பள்ளியில் உரை நிகழ்த்திய அவர், 87 சதவீத பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட...