​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் கைது

புதுச்சேரியில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியை அடுத்த ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரை கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு வழக்கில் பாகூர் காவல்துறையினர்...

நண்பணிடம் பந்தயம் கட்டி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறியவன் கைது

புதுச்சேரியில் குடிபோதையில் நண்பணிடம் பந்தயம் கட்டி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறியவனை போலீசார் கைது செய்தனர். வியாழக்கிழமையன்று புதுச்சேரி ரெயின்போ நகரில் ஆளரவம் அற்ற பாதையில் நடந்து சென்ற வடமாநில பெண் ஒருவரை 2 இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். அவர்களில் ஒருவன் அந்தப்...

“ஒரு ரூபாய்” பேருந்தில் ஓட்டை

புதுச்சேரி அரசு சார்பில் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இயக்கப்படும் “ஒரு ரூபாய்” பேருந்தின் தரைதளத்தில் சிறுவர்கள் நுழையும் அளவுக்கு ஏற்பட்டுள்ள ஓட்டை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்பகுதிளில் இருந்துவரும் அரசுப்பள்ளி, அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம்...

புதுச்சேரியில் சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு சிறை..!

புதுச்சேரி மத்திய சிறையில் விசாரணைக் கைதி மர்மமான முறையில் இறந்த வழக்கில் சிறைத்துறை கண்காணிப்பாளர் சிறையில் அடைக்கப்பட்டார். ரெட்டிச்சாவடியைச் சேர்ந்த ஜெயமூர்த்தியை கடந்த ஆண்டு இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்த பாகூர் போலீசார், காலாப்பட்டு மத்திய சிறையில்...

புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் மற்றும் போனஸ் தொகை இன்று வழங்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளம் இன்றே வழங்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார். ஊதிய பாக்கி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ந் தேதி முதல் புதுச்சேரி அரசு...

தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு...

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில், மத்திய மேற்கு வங்கக் கடலிலும், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலிலும் நிலவும்...

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்தது. கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் மழைநீர் வழிந்தோடியது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மழையால்...

சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் இலவசமாக நடத்தவுள்ளதாக அதன் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 176 சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான அறிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது....

விதி மீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க குழுக்கள் அமைத்து கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரியில் விதியை மீறி பேனர் வைத்தல் மற்றும் மோசமான சாலைகளை கண்காணிக்க குழு அமைத்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் ஏற்கனவே பேனர் தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் விதி மீறி வைக்கப்படும் பேனர்கள், மோசமான சாலைகளை கண்காணித்து...