​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆராய்ச்சி மாணவ, மாணவிகளுக்கான பயிற்றுநராக இருந்தவர் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ். இவர் தன்னுடன் செல்போனில் பேசி, பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவி...

கல்வியின் தரத்தை மேம்படுத்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட நியமனங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு புதிய உத்தரவு

பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பேராசிரியர்கள் உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட நியமனங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்புடன் தேசிய தகுதி தேர்வான நெட் ((NET)) அல்லது மாநில தகுதி...

கல்லூரி மாணவிக்கு பேராசியர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம்

திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மாணவியை நீக்கம் செய்து கோவை வேளாண் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வாணாபுரம் அடுத்த வாழவச்சனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி...

பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை கீழமை நீதிமன்றம் நாள் தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும்

பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தினந்தோறும் வழக்கை விசாரித்து விரைவாக முடிக்குமாறு, கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் நிர்மலா...

உயிர்காக்கும் வேம்புக்கு உரிய மரியாதை அளித்த பேராசிரியர்

மருத்துவ குணம் மிக்க வேம்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் வேப்பந்தோப்பை உருவாக்கி உள்ளார் புதுக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர். அதுபற்றிய செய்தித் தொகுப்பை இப்போது காணலாம். சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பணப்பயிர்களை உற்பத்தி செய்வதிலேயே அதிக...

நிர்மலா தேவி உள்ளிட்ட 3பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைதான பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் கைதான நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை...

நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேருக்கும் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் விருதுநகர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட மூவருக்கும் ஆயிரத்து 360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டன. இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்....

புற்றுநோயை துல்லியமாக முன்கணிப்பதில் முன்னோடியாகத் திகழும் அருள் சின்னையனுக்கு ‘சிறந்த ஆய்வாளர்’ விருது

புற்றுநோயை துல்லியமாக முன்கணிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் சின்னையனுக்கு ‘சிறந்த ஆய்வாளர்’ என்ற விருதை அமெரிக்க தேசிய புற்றுநோய் மையம் வழங்கியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் சின்னையன் புற்றுநோயை முன்கூட்டியே கணிக்கும் வகையில் மிச்சிகன் ஆன்காலஜி சீக்வென்சிங்-ஐ...

பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனுவின் விசாரணை ஒத்திவைப்பு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக...

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை ஏதுமில்லை - KP அன்பழகன் தகவல்

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏதுமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். சேலம் இரும்பாலை மனமகிழ் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம்...