​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குஜராத் சர்தார் வல்லப் பாய் பட்டேல் சிலைத் திறக்கும் நாளில் பழங்குடியினரின் 72ஊர்களில் சமைப்பதில்லை என அறிவிப்பு

குஜராத்தின் நர்மதை ஆற்றின் அணைப்பகுதியில் சர்தார் வல்லப் பாய் பட்டேல் சிலையைத் திறக்கும் நாளில் தங்கள் வீடுகளில் உணவு சமைக்கப் போவதில்லை என 72ஊர்களின் பழங்குடியின மக்கள் அறிவித்துள்ளனர். குஜராத்தில் நர்மதை அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 589அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள சர்தார்...

தேனியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு, காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிபட்டியை அடுத்த சித்தார்பட்டியைச் சேர்ந்த வீரசின்னம்மாள் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ராஜதானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

முகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்ஃபோனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் முகவரி கேட்பது போல் நடித்து, முதியவரிடம் செல்ஃபோனை பறித்துச் சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயபாண்டியன் என்பவர், வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு சாலையில்...

பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இன்று காலை கொல்கத்தாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து ஹூக்ளி (Hooghly) மாவட்டத்துக்குட்பட்ட ஹரிபால் (Haripal) என்ற இடத்தில் கட்டுப்பாட்டை...

சென்னை, கொரட்டூர் ஏரி பகுதியில் வசித்த மக்களுக்கு செம்மஞ்சேரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்க திருமாவளவன் கோரிக்கை

சென்னை அம்பத்தூர் கொரட்டூர் ஏரி பகுதியில் வசித்த மக்களுக்கு செம்மஞ்சேரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்க வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இப்பகுதியில்  கட்டப்பட்ட வீடுகளுக்கு டோக்கன்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பல நபர்களுக்கு டோக்கன்கள்...

உத்தரப்பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். ஷாஜஹான்பூர் என்ற இடத்தில் கல்லூரி ஒன்று கட்டப்பட்டது. நேற்று அதன் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில்...

மதுரையில் பெய்த கனமழையால் கண்மா உடைந்து சாலையில் ஓடும் நீரில் மீன்பிடித்து விளையாடும் பொதுமக்கள்

மதுரையில் நேற்று பெய்த கனமழையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் மீன்களை பிடித்து சிறுவர்களும், பெரியவர்களும் விளையாடினர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டி.ஆர்.ஓ காலனி மெயின் சாலையில் ஓடிய தண்ணீரில் மீன்கள் துள்ளிக் குதித்தன.... காந்திபுரம் கண்மாய் சரியாக...

குஜராத்தில் உத்தரப்பிரதேசத்தினர் தாக்கப்பட்டதற்கு மாயாவதி கண்டனம்

குஜராத்தில் உத்தரப்பிரதேச, பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் 14மாதக் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகப் பீகார் மாநிலத் தொழிலாளர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்துக் மாநிலத்தின் பல்வேறு...

நாமக்கலில் ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் மலை போல் நுரைதள்ளியதால் பொதுமக்கள் அதிர்ச்சி...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ரசாயனக்கலப்பால் திருமணிமுத்தாற்றில் மலை போல் நுரை பொங்குவது பொதுமக்களையும், விவசாயிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சேலத்தில் பெய்த கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறை ஆலைகள்,...

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 இளைஞர்கள் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 இளைஞர்களை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாண்டி நேற்றிரவு கோவளம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சாலையில் நின்றுக்...