​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பிடிஎப்’ என்ற ஆராய்ச்சி மேற்படிப்பு அறிமுகம்

பிஎச்.டி((Ph.D)) முடித்து தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கென, அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக  போஸ்ட் டாக்ட்ரல் பெல்லோஷிப்((Post Doctoral Fellowship)) என்ற ஆராய்ச்சி மேற்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து...

அழைத்துச் சென்ற முதியவர்களை மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இன்றைக்குள் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவு

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே, அவ்வில்லத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்...

பார்வையாளர்களைக் கவர்ந்த அமெரிக்காவுக்கு வலசை வந்த பெரும் பச்சைக்கிளிகள்

அர்ஜெண்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு வலசை வந்த பெரும் பச்சைக்கிளிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. நியூயார்க் நகரின் பனிபடர்ந்த பகுதிகளில் கிரீன் மோங்க் என்ற பெரும் பச்சைக்கிளிகள் விளையாடி வருகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களையும், கட்டடங்களையும் தங்களின் தற்காலிக தங்குமிடமாக மாற்றியுள்ள கிளிகளை...

சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு - சசிகலா அண்ணன் மகன் விவேக் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவில் சேர்க்கப்பட்டதாக தகவல்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது. அதமட்டும் இன்றி சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் சி.இஓ.வுமான விவேக் ஜெயராமனுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் இடம் ஒதுக்கீடு...

புதுச்சேரி சட்டமன்றத்திற்குள் நுழைய முயன்ற பாஜக நியமன எம்எல்ஏ.க்கள் தடுத்து நிறுத்தம்

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற, நியமன பாஜக எம்எல்ஏ.க்கள் 3 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளே அனுமதிக்க வலியுறுத்தி 3 பேரும் சட்டப்பேரவை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. முன்னதாக, காலை...

சென்னை இரும்புக் கடை கொள்ளை வழக்கில் ஊழியர் உள்பட 4 பேர் கைது - ரூ.40 லட்சம் பறிமுதல்

சென்னை மண்ணடியில் உள்ள இரும்புக்கடையில் 52 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கடையின் ஊழியரே தமது நண்பர்கள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவில் இந்தியன் ஸ்டீல் ட்ரேடர்ஸ் என்ற இரும்புக்கடை உள்ளது. சலீம் என்பவருக்கு சொந்தமான...

தனிநபர் தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பகிர்வதாக பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு பா.ஜ.க. பதிலடி

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிப்பது தொடர்பாக பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது.  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல் சில வாசகங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமது...

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் - மத்திய அரசு திட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குப் பதில் காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய நீர்வள அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காவிரி வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு  தண்ணீர் என்பதை...

கோவில் கேட்டை திறந்து உள்ளே சென்று இட்லி மாவை ருசித்துச் சாப்பிட்டுவிட்டுச் சென்ற ஒற்றை யானை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவில் கேட்டை திறந்து உள்ளே சென்ற ஒற்றை யானை, அங்குள்ள சமையலறையில் வைக்கப்பட்டிருந்த இட்லி மாவை ருசித்துச் சாப்பிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் மலையடிவாரத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோயில் உள்ளது....

தனியார் விடுதி மேலாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வழக்கறிஞர்

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உணவகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த மாதவன், சென்னை அண்ணா நகரில் தங்கி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று கேளம்பாக்கத்திற்குச் சென்ற மாதவன், படூரில் உள்ள பி.பி. உணவகத்திற்கு சாப்பிடச் சென்றுள்ளார். சைவ...