​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - இருவர் கைது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சாந்திநகரில் உள்ள எச்.டி.எஃப்.சி. ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்ட இருவர் இன்று அதிகாலை ஹெல்மெட், முகமூடி அணிந்து கொண்டு ஏடிஎம் மையம் அருகே...

TNPSC முறைகேட்டில் கைதான ஐயப்பனுடன் எந்த தொடர்பும் இல்லை - திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 25 ஆண்டுகாலம் அரசியலிலும் 15 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய தன்னுடன் பலரும் புகைப்படம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆட்சியர் சந்திப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி துவக்கி வைத்தார். எந்த ரேசன் கடைகளிலும் பொருட்கள் வாங்க வழிவகை செய்யும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை சோதனை முறையாக தூத்துக்குடி மற்றும் நெல்லை...

2 மாவட்டங்களில் மட்டும் ஒரேநாடு - ஒரே உணவுத் திட்டம் இன்று முதல் அமல்

தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் ஒரே கார்டு ஒரே உணவுத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே கார்டு ஒரே உணவு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற ஜூன் மாத த்திற்குள் அனைத்து மாநிலங்களும்...

ஊர் ஊராக கொள்ளையடித்து நகை கடை நடத்திய கும்பல்

நெல்லையில் 77 சவரன் நகை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை, 400 கிலோ மீட்டர் பயணம் செய்து 460 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் பிடித்துள்ளனர்.ஊர் ஊராக சென்று கொள்ளையடித்து நகைக்கடை நடத்தி வந்த கும்பல், தொழில் பெருக...

இறந்த காவலாளியின் உடலை நெருங்க விடாமல் பாசப்போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய்

நெல்லையில் தொழிலதிபர் ஒருவரது வீட்டின் காவலாளி மர்மமான முறையில் இறந்த நிலையில், அவரது உடலை நெருங்க விடாமல் 4 மணி நேரத்துக்கும் மேலாக பாசப் போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய், உடலை மீட்கும் முயற்சியின்போது பரிதாபமாக உயிரிழந்தது. பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பேருந்து...

பறவைகள் திருவிழா மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

நெல்லையில் 3 நாட்கள் பறவைகள் திருவிழாவும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது. தாமிரபரணி பாசனக் குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்த பறவைகளை இனம், ரகம் வாரியாக பிரித்து கணக்கெடுக்கின்றனர். நாமக்கோழி, மூக்கன் தாரா, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, ஜம்பு நாரை, கூழைக்கடா, பவளக்கால் உள்ளான்...

கோழிக் கழிவுகளை கொட்ட வந்த இரு கண்டெய்னர் லாரிகள் சிறைபிடிப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த இரு கண்டெய்னர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கூடங்குளம் அருகிலுள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரம் கிராமத்தில் காட்டுப்பகுதியில் உள்ள அனுமன் நதி ஓடையில் கழிவுகளை கொட்டுவதற்காக வந்த அந்த லாரிகளிலிருந்து கடுமையான துர்நாற்றம்...

தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் மறுபிரேத பரிசோதனை

கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசப்பட்ட பெண்ணின் உடல் மறுபிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட வித்யா என்ற கேரள பெண்ணின் சடலத்திற்கு உரிமைக்கோரி யாரும் வராததால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு...

பள்ளியில் 96.. வீட்டில் 302..! பாவம் நாசமான வாழ்க்கை

96 பட பாணியில் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பள்ளி தோழியுடன் மலர்ந்த காதலால், மனைவியை கொலை செய்து நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசிய கணவன், பெண்  நர்சிங் சூப்பிரண்டுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை...