​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சாலை விதிகளை மீறுபவர்கள் ஆட்டோமேடிக் கேமரா மூலம் கண்காணிப்பு

செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருப்பதால் அங்கு ஆட்டோமேடிக் கேமரா பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 31வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில்...

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் 'Fastag' முறை இன்று முதல் கட்டாயம்

சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும்...

விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த தடை

சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும் வரை விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விழுப்புரம் - நாகை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள், வனங்கள்...

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளை அகற்ற மத்திய அரசு உத்தரவு

தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள அனைத்து வேகத்தடைகளையும் அகற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யும் விதமாக, சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட...

காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு - வாகன போக்குவரத்து 4வது நாளாக முடக்கம்

காஷ்மீரில் ஏற்பட்ட மண் சரிவால் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து 4 வது நாளாக முடங்கி உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு வழியாக நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையே காஷ்மீரின் முக்கிய போக்குவரத்து வழித்தடம் ஆகும். இந்த...

பாஸ்டேக் பண வசூலில் சுங்க சாவடி முறைகேடு..!! வங்கி கணக்கில் திருட்டு

சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆழ்ந்த தூக்கத்தால் வாகன ஓட்டிகளின் பாஸ்ட்டேக் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து...

சுங்கச்சாவடிகளில் FASTag வசூல் அதிகரிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நெரிசல் மற்றும் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கில் பாஸ்டாக் எனப்படும் மின்னணு சுங்க வசூல் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. கடந்த 15 ஆம் தேதி முதல் இது கட்டாயமாக்கப்பட்டாலும், அதற்கான கெடு மேலும் ஒரு மாதம்...

மதுரை அருகே புதிதாக 3 சுங்கச்சாவடிகள் அமைத்தது ஏன்? தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

புதிதாக அமைக்கப்பட்ட 3 டோல்கேட்டுகளில் சுங்கக்கட்டண வசூலை நிறுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கில், 27 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 3 டோல்கேட்டுகளை அமைத்து கட்டணம்...

சுங்கச் சாவடிகளில் FASTag முறை ஒரு மாதம் ஒத்திவைப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு, சாலைப் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்களால் ஏற்படும்...

சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடும் காட்டு யானைகள்- வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுதந்திரமாக நடமாடும் காட்டுயானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்றிரவு சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் சாலையில் சுதந்திரமாக சுற்றி திரிந்தன....