​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு

2021ம் ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவு செய்யும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்....

முதலமைச்சர் தலைமையில் தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம்

தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த தேடுதல் குழு, அதுதொடர்பான பரிந்துரைகளை முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு வழங்கியது. இவர்களில் 3 பேரை இறுதி...

தென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..!

தென்பெண்ணை ஆறு தொடர்பான, நதிநீர் பிரச்சினையில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.  பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த புகாருக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை...

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு தி.மு.க. தொடர்ந்து சூழ்ச்சி - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு தி.மு.க. தொடர்ந்து சூழ்ச்சி செய்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றார். ரஜினி, கமலுடன் எதிர்காலத்தில்...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால்...

கரை திரும்பாத படகுகளை கண்டறிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன - அமைச்சர் ஜெயக்குமார்

புயல் எச்சரிக்கைக்கு முன்பாக மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பாத கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 12 படகுககளின் இருப்பிடத்தை கண்டறிந்து தகவல் தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

"GoBack Modi" என ட்ரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி - ஜெயக்குமார்

பிரதமருக்கு எதிராக சமூகவலைத் தளங்களில் ட்ரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின், பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, அவரை முதலமைச்சர், துணை...

கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தலா ரூ. 20 கோடி கொடுத்துள்ளது தி.மு.க - அமைச்சர் ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தி.மு.க 20 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கொடுத்திருக்கிறது என்றும் எனவே மத்திய அரசும் சிபிஐயும் இதனை விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு விழா...

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல, அரசியல் ஆட்டமே இல்லை - அமைச்சர் ஜெயகுமார்

ஜோக்கர் இல்லாமல் சீட்டாடம் மட்டுமல்ல, அரசியல் ஆட்டமே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயக்குமார் ஒரு...

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் குரூப்-4 தேர்வர்களுக்கான ஒருநாள் ஊக்க முகாமில் உரையாற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றம் முன் ஜாமீனை மறுத்த பின்பே ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ...