​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் திடீர் அருவிகள்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் பெய்த கனமழையால் உதகை - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையின் ஓரங்களில் கண்ணைக் கவரும் வகையில் 10க்கும் மேற்பட்ட திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. வெள்ளியை உருக்கி ஊற்றுவதை போன்று இந்த புதிய நீர் வீழ்ச்சிகள் கண்களுக்கு ரம்மியமாக...

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே குப்பைகளை சுத்தம் செய்த பொன்.ராதாகிருஷ்ணன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரயில்வே நிலையம் அருகே குவிந்து கிடந்த குப்பைகளை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அகற்றினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற அவர், கழிவுநீர் கால்வாய் திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகளைக் கண்டித்த...

உதகை செல்லும் ரயில் பாதையில் மண்சரிவு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, கல்லார் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு பெய்த கனமழையால் மூன்று இடங்களில்...

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி நடந்ததாக புகாரின் பேரில் விசாரணையில் இருந்த பெண் காசாளர் தூக்கிட்டு தற்கொலை

மேட்டுப்பாளையம் அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், சங்கத்தின் பெண் காசாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெள்ளாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  கடந்த மாதம்...

குன்னூர் - மேட்டுப்பாளையம் பகுதியில் வலம் வரும் இருவாச்சிப் பறவைகள்

நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள மரங்களில் அமர்ந்துள்ள அரியவகை இருவாச்சி பறவைகள், சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தச் சாலையின் அருகே உள்ள அருவியில் தண்ணீர் கொட்டுவதுடன், பசுமை படர்ந்த இப்பகுதியில் இதமான வானிலையும்...

தேனிலவு கொண்டாட உதகைக்கு வந்த இங்கிலாந்து தம்பதியினருக்காக சிறப்பு மலை ரயில் இயக்கம்

தேனிலவு கொண்டாடுவதற்காக உதகைக்கு வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினருக்காக, சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. நீராவி மூலம் இயங்கும், நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயில்  யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் மலைரயிலில் எப்போதும்...

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை.

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். சிறுமுகை அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமம் மற்றும் அறிவொளிநகர் பகுதியில் நாய்கள் மற்றும் கால்நடைகளை, கடந்த 3 மாதங்களாக வேட்டையாடி வந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினர்...

கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை காரணமாக கடந்த ஒருவார காலமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோவையில் உள்ள அனைத்து...

மேட்டுப்பாளையத்தில் தனியார் மருந்து தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் மருந்து ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப் பொருட்கள் எரிந்து நாசமாகின. மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்பேட்டையில் அக்சண்ட் பார்மா (Accent Pharma) என்ற மருந்து தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை புகை...

நாட்டு வெடிகள் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடும் கொடூர கும்பல்

நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி யானை உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடும் கும்பல்களால் விவசாயிகளின் கால்நடைகளும் உயிரிழக்கின்றன. மேட்டுப்பாளையம் சிறுமுகை, காரமடை , பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்டை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. விலங்குகளின் இறைச்சி, தோல், நகங்களுக்கு நல்ல விலை...