​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சூறைக்காற்று வீசியதால் சென்னையில் இருந்து சென்ற விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாத நிலை

தூத்துக்குடி விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதன் காரணமாக, சென்னையில் இருந்து சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது. சென்னையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் பிற்பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அருகே சென்றது. அப்போது வழக்கத்திற்கு...

தமிழக மீனவர்களுக்கு எதிரான திட்டத்தை ரத்து செய்ய இலங்கையை வலியுறுத்த வேண்டும்

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள கடற்தொழில் திட்டத்தை ரத்து செய்ய, பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,...

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்டக் கோரிய வழக்கில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்டுவது தொடர்பாக பரிசீலித்து உரிய முடிவெடுக்க  விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையின் சிறப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விளங்குவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். விமான நிலையத்துக்கு பல்வேறு சாதிய  தலைவர்களின்...

மதுரை விமான நிலையத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து வந்த விமானத்தில் இருந்த மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த  குதுப்தீன் என்பவர் உள்ளாடையில்...

மதுரை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கியது

மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து மத்திய சுங்க இலாகா வருவாய் புலனாய்வு பிரிவினர் பயணிகளிடம் தீவிர...

மதுரை விமான நிலையத்தில்,விமானத்தின் இருக்கைக்கு கீழே கடத்திவரப்பட்ட 1,600 கிராம் தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 1,600 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கை கொழும்புவிலிருந்து மதுரைக்கு இன்று பிற்பகல் வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய சுங்கம் மற்றும் வருவாய்...

அட்டைப் பெட்டிகளில் பணம் பதுக்கல்...! மதுரை விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

மதுரை விமான நிலையத்தில் 3 பெட்டிகளில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணத்தை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 2 பேரைக் கைது செய்தனர். மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா...

கொழும்புவில் இருந்து வந்த பயணியிடம் ரூ. 21 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானம் ஒன்றில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஹுசைன் அஸ்ரு (Hussain Asru)என்ற பயணியின்...

மதுரை விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 400 கிராம் தங்கக்கட்டிகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களில் 400 கிராம் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்த நபர் மதுரை விமான நிலையத்தில் பிடிபட்டார். மலேசியாவிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணித்தவர்களும், அவர்களது உடைமைகளும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன. அப்போது அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அகமது கனி என்பவரது பையிலிருந்த...

மதுரை விமான நிலையத்தில் ரூ. 24.5 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட இருபத்து நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகளில் சந்தேகத்திற்கிடமான ஒருவரிடம் சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அந்த பயணியின் உடைமைகளில் தங்கக்...