​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேலவளவு கொலை வழக்கு: 13 பேருக்கு நோட்டீஸ்..!

மேலவளவு கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அருகேவுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் வெற்றி பெற்றார். இதில்...

சிலை கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.காதர் பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சிலை கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.காதர் பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில், கடந்த 2008ஆம் ஆண்டு ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் தோண்டியபோது 6...

2018-2021ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை வெளியிட தமிழக அரசுக்கு ஒரு மாத கால அவகாசம்

2018-2021ஆம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆன்லைனில் வெளியிட, தமிழக அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யபட்ட மனுவில், 2017-2018ம் ஆண்டுக்கான தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை, தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண...

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள் என்ன? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தினால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் எனவே, மருத்துவர்கள்...

மாதவரம் பகுதியில் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோத கட்டிடங்களை அகற்ற மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாதவரத்தில் சாலையின் நடுவே கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற கோரி, செல்வராஜாத்தி அம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற...

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் மறுகுற்றச்சாட்டு பதிவுக்காக சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு சாதனங்கள் வாங்கியது குறித்து, சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது 1996, 1997...

ஜெயலலிதா நினைவிட பணிகளுக்கு தடை கோரிய வழக்கு நாளை விசாரணை

ஜெயலலிதா நினைவிட பணிகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. டிராபிக் ராமசாமியின் மனுவில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தால் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தல் உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு நினைவிடம்...

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில், சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும், அந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்றும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்த புரட்சிகர...