​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ய அரசு அதிகாரிகள் உதவியுள்ளார்களா..?

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிகளில் சேர அரசு அதிகாரிகள்  உதவியுள்ளார்களா என்பது குறித்து பதில் அளிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முறையான கலந்தாய்வு மூலம்...

கோகுல்ராஜ் கொலை தொடர்பாக ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி

கோகுல்ராஜ் கொலை தொடர்பாக ஜாமீன் கோரிய சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேரின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலைவழக்கில் தொடர்புடைய கிரி என்கிற கிரிதரன், சுரேஷ், பிரபு, சந்திரசேகர் ஆகிய 4 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி...

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - நேரில் ஆஜராக அறிவுரை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி போலீசாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. ஆள்மாறாட்டம் செய்து நீட்தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மாணவர்...

கருணாநிதியின் மகள் செல்விக்கு எதிரான நிலமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்விக்கு எதிரான நில மோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரும் மனு மீது பதில் அளிக்க சென்னை மத்தியக்குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 3 ஏக்கர் நிலத்திற்கு மூன்றரை கோடி ரூபாய் முன் பணம்...

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவை மாநகராட்சியுடன் கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளுக்கு  பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக 740 கோடி ரூபாய்...

தமிழகத்தில் புதிய வாகன மாடல்கள் விற்பனை - மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் புதிய வாகன மாடல்களை விற்பனை செய்ய போக்குவரத்து ஆணையரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய இரு, 4 மற்றும் கனரக வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும்போது ...

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறினால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஆவின் தலைவராக செயல்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ தமிழரசனுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சக்கரப்பட்டியை சேர்ந்த பெரிய கருப்பன் உள்ளிட்ட 6 பேர் உயர்நீதிமன்ற மதுரை...

பேனரை, அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மதிமுக நிர்வாகி கைது

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்ட பேனரை, அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. விழாவிற்காக...

காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

நடிகர் சூரியா நடித்துள்ள காப்பான் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான்  திரைப்படம் வருகிற  20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில்...

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்கால தடை

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த சோனியாகாந்தி, ராமநாதபுரத்தை சேர்ந்த கலைவாணி உள்ளிட்ட 12 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்...