​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலூர் மக்களவை தேர்தல் : திமுக வெற்றி

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி... தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வழங்கினார்.   வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ...   அதிமுக  4,77,199 திமுக  4,85,340 நாம் தமிழர்  26,995    ...

காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்து,  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாக்கள்  நாடாளுமன்ற மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்க  உயிரையும் கொடுக்கத் தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக குறிப்பிட்டார்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு...

வணிக ரீதியிலான வாடகைத்தாய்க்கு தடை

வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெறும் முறைக்கு தடை கோரும் ஒழுங்குமுறைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதன்படி வாடகைத் தாய்க்கு குழந்தை பெறுவதற்கான மருத்துவ செலவு, 16 மாதங்களுக்கான காப்பீட்டு தொகை தவிர வேறு எந்த பணமும் வழங்கக்...

அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது

நாட்டின் முக்கிய அணைகளை பாதுகாப்பதற்கான மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியுள்ளது. நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. புதிதாக 450 அணைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அணைகளை பாதுகாப்பது தொடர்பான பிரச்சினை முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது. அணைகளை...

போக்சோ சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் மரண தண்டனை விதிக்கும் போக்சோ சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை கடுமையாக்குவதற்காக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும்...

அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை விரைவாக வெளியேற்றுவது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, பல எம்.பி.க்கள் தங்களுக்கான...

நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க இனி ஒரே தீர்ப்பாயம் !

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையை தீர்க்க ஒரே தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மத்திய நீர்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் 2 ஆண்டுக்குள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது...

மக்களவை இனி காகித பயன்பாட்டிலிருந்து விடுபடும்

மக்களவையின் அடுத்தக் கூட்டம் காகித பயன்பாடு இல்லாத அவையாக மாறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா எம்பிக்களிடம் தெரிவித்தார். பல கோடி ரூபாய் இதனால் செலவு மிச்சமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். உறுப்பினர்கள் யாருக்காவது குறிப்பெடுக்கவும் எழுதவும் காகிதம் தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்...

மத்திய அரசால் பராமரிக்கப்படும் நினைவுச்சின்னங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம்

மத்திய அரசால் பராமரிக்கப்படும் நினைவுச்சின்னங்கள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், மக்களவையில் நாடு முழுவதும் நினைவுச் சின்னங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். நாடு முழுதும்...

எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவையிலும் நிறைவேறியது முத்தலாக் தடை மசோதா

மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாத போதிலும், பல்வேறு தடைகளைக் கடந்து முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும் முத்தலாக் தடை மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் கடந்த வாரம் நிறைவேறிய இந்த...