​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை - தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே இல்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவினங்கள் வெகுவாக குறையும் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக சட்டக் கமிஷன் நடத்திய கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன....

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது, எதார்த்தத்தை மீறியது - மம்தா பானர்ஜி

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது, எதார்த்தத்தை மீறியது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காமல், கவிழும் ஒவ்வொரு முறையும், மீண்டும் மீண்டும், நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியமா?...

நாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த பாஜக திட்டம்

11 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து பா.ஜ.க. பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு  மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் அடுத்த ஆண்டு...

ஸ்டாலின் சட்டமன்றத்துக்குள் செயல்பட்டால் நன்றாக இருக்கும் - சரத்குமார்

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் வெளியில் இருந்து செயல்படுவதைவிட சட்டமன்றத்துக்குள் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது....

சட்டப்பேரவைக்குள் போதை வஸ்துக்களுடன் வந்த அ.தி.மு.க. MLA-க்கள்

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான கஞ்சா, குட்கா, பான்பராக் உள்ளிட்டவற்றை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்தனர். போதைப் வஸ்துக்களை அவரகள் சபாநாயகர் முன் எடுத்துக் காட்டினர். அப்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்றத் தலைவர், அன்பழகன் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கஞ்சா,...

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று ஒரே நாளில் 19 மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று மட்டும் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டசபையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த மே மாதம் 29ம் தேதி தொடங்கியது.  23 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரில் லோக் ஆயுக்தா...

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்டக்கமிஷன் யோசனைக்கு 9 கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல்களை நடத்தும் சட்டக்கமிஷன் பரிந்துரைக்கு  நான்கு கட்சிகள் வரவேற்பும், 9 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.  மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்தறிய சட்டக் கமிஷன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு...

சட்டப்பேரவையில் நாளை லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து வருகிற 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் நாளை லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியா முழுவதும் அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை...

மக்களவைக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் குறித்து அரசியல் கட்சிகளுடன் சட்டக் கமிஷன் இன்று ஆலோசனை

மக்களவைக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்திற்கு அதிமுக, திமுக, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்க திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்த பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ....

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டதிருத்த மசோதா பேரவையில் தாக்கல்

தனியார் பள்ளிகளை வரன்முறைபடுத்தி, கட்டுப்பாடுகளோடு செயல்பட வைக்கும் வகையிலான சட்டதிருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வியாழக்கிழமையன்று, 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தனியார் பள்ளிகளில் படிக்கும்...