​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுற்றுலா பட்டியலில் கொடைக்கானல் பேத்துப்பாறை கல் திட்டைகள்: மக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் உள்ள ஆதிமனிதன் கல் திட்டைகள் சுற்றுலா பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் மலையில் பேத்துப்பாறை கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, கல் குகைகள், கல்திட்டைகள் உள்ளன. இவற்றை மத்திய...

கொடைக்கானல் நீர்வீழ்ச்சிகளில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

வார விடுமுறை நாட்களையொட்டி மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தொடர்மழை காரணமாக பாம்பார்புரம் அருவி, வெள்ளி அருவி, பியர்சோழா அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் வெள்ளி நீர் வீழ்ச்சியில் மட்டும்...

கொடைக்கானலில் உள்ள படகு குழாமிற்கு சீல் வைப்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து கொடைக்கானல் ஏரியில் உள்ள தனியார் படகு குழாமிற்கு சீல் வைக்கப்பட்டது.  கொடைக்கானல் ஏரி பகுதியில் அமைந்துள்ள தனியார் படகு குழாமின் குத்தகை ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியுடன் முடிந்த நிலையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், ...

கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகளை இயக்க இடைக்கால தடை

கொடைக்கானல் போட் கிளப்பிற்கு சீல் வைக்கவும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகளை இயக்க தடை விதித்தும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக ஆரோக்கியசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொடைக்கானல் ஏரியின் 8 சென்ட்...

கனமழை : பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை..!

9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை கொடைக்கானலில் மலைப் பகுதிகளில் பள்ளிகள்- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு...

மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு மாணவனின் தந்தை அடித்துக் கொலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், ஒரு மாணவனின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேல்மலை கிராமமான பூண்டி அரசு பள்ளியில் பயின்று வரும் இரு மாணவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி வளாகத்தில்...

கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் சாலையில் 5 இடங்களில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுக்கம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கிருந்து பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் செல்லும் பாதை கடந்த ஆண்டு வீசிய...

பாறைகளுக்கு இடையே குகைக்குள் அமைந்துள்ள கதவு மலை சிவன் கோயில்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில் பாறைகளுக்கு இடையில் அமைந்துள்ள கதவு மலை சிவன் கோயிலுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் பள்ளத்தாக்கில் தாண்டிக்குடி கிராமத்துக்கு அருகே குகைக்குள் அமைந்துள்ளது கதவுமலை சிவன் கோயில். சுமார் ஆயிரத்து...

அரையப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட 500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்தூண்

கொடைக்கானல் மலைப்பகுதியில் காலப்போக்கில் புதைந்து போனதாகக் கூறப்படும் அரையப்பட்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நுழைவுவாயிற் தூணும் அடுக்கம் கிராமத்திலுள்ள கற்தூணும் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை தொல்லியல்துறையினர் உறுதி செய்துள்ளனர். கொடைக்கானல் மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, அடுக்கம், பேத்துப்பாறை,...

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் வழிபாட்டு தலங்களுக்கு விதி விலக்கு அளிக்கக்கோரிய மனு தள்ளுபடி

கொடைக்கானலில் விதிமீறலில் ஈடுபட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு விதி விலக்கு அளிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. கொடைக்கானல் நகராட்சி பகுதியில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த...