​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்து முன்னணி தலைவரை அரிவாளால் வெட்டிய கும்பல் - உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சாஜாராமை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்ய முயன்றது. பகோடு பேரூராட்சி இந்து முன்னணி தலைவராக இருக்கும் சாஜாரம், தான் நடத்தும் கடையை பூட்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில்...

குறும்பத்தூர் பாலக்குளத்தைத் தூர்வாரக் கோரி விவசாயிகள் குளத்துக்குள் அமர்ந்து போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குறும்பத்தூர் பாலக்குளத்தைத் தூர்வாரக் கோரி விவசாயிகள் குளத்துக்குள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

கன்னியாகுமரியில் 2 நாட்களாக சீற்றத்துடன் காணப்பட்ட கடல்..! இயல்பு நிலைக்கு திரும்பியது

கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக சீற்றத்துடன் காணப்பட்ட கடல், இன்று இயல்பு நிலையை அடைந்தது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடல் சீற்றமாக காணப்படும் என இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரித்திருந்தது. ஆனால் கன்னியாகுமரியில்...

கன்னியாகுமரியில் இரண்டாவது நாளாக கடல் சீற்றம் - 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக காணப்படும் கடல் சீற்றத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்தது. கன்னியாகுமரியில் இன்றும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கொட்டில்பாடு, ராமன்துறை பகுதிகளில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 நாட்டு படகுகள் கடல் அலைகளில் இழுத்துச் செல்லப்பட்டன. தேங்காய்பட்டினம்...

கன்னியாகுமரியில் 10அடி உயரத்திற்கும் மேல் எழுந்த கடல் அலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்து அடி உயரத்திற்கு மேல் கடல் அலை வீசி ஊருக்குள் கடல் நீர் புகுந்ததால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  நேற்று மாலை வரை கடல் வழக்கம் போல் காட்சி அளித்தது என்றாலும்,...

தென் மாவட்டங்கள் கடல் சீற்றம்

கடல் சீற்றத்தால் கன்னியாகுமரியின் குளச்சல், வள்ளவிளையில் சில வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 11 அடி உயரம் வரை கடலில் அலைகள் எழும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாகவும்...

தென் மாவட்டங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை

தமிழக தென் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3...

தென் மாவட்ட கடல் பகுதியில் 11 அடி உயரத்திற்கு அலைகள் எழும் அபாயம்

இன்றும் நாளையும் கடல் சீற்றம் அதிகரித்து அலைகள் மிக உயரமாக எழும் என்பதால்,  பொழுதுபோக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்தியா கடல் சார் தகவல் மையத்தின் எச்சரிக்கையின் படி, கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம்...

முன்னாள் காவல் ஆய்வாளரின் மகன் - மருமகளை விடியவிடிய தாக்கி சாலையோரம் வீசிச் சென்ற கந்துவட்டிக் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே முன்னாள் காவல் ஆய்வாளரின் மகன் மற்றும் மருமகளிடம் அதிக வட்டி கேட்டு விடியவிடிய தாக்கி சாலையோரம் வீசிச் சென்ற கந்துவட்டிக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.  முன்னாள் ஆய்வாளரான செல்வதாஸ் என்பவரின் மகன் பெலிக்ஸ் - சஜினி...

நகராட்சிக்கு ரூ. 1 கோடி வரிபாக்கியை செலுத்தாத பி.எஸ்.என்.எல். நிறுவனம்

ஒரு கோடி ரூபாய் வரிபாக்கியை செலுத்தாததால் நாகர்கோவில் BSNL நிறுவன தலைமை அலுவலகத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2 கோடி ரூபாய் வரிபாக்கியில் ஒரு கோடியை மட்டும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மீதத் தொகையை செலுத்துமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும்...