​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலாற்றில் அதிகளவில் உபரி நீரை சேகரிக்க ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்த புதிய தடுப்பனை திட்டம்

பாலாற்றின் குறுக்கே சென்னை ஐஐடி உதவியால் கட்டப்பட்ட தடுப்பணையால் நீராதாரம் உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சமூக பங்களிப்பு நிதி உதவியின் கீழ் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு அருகில் அமைந்துள்ளதால் அந்த கிராமத்தில் கடல் நீர்...

முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரின் மகனுக்கு அரிவாளால் வெட்டு - போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரின் மகனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனின் மகன் மணிரத்தினம் என்பவருக்கும் அதே பகுதியில் வேறொரு...

மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக WhatsApp-ல் பரவிய தகவல் - பக்தர்களிடம் தீவிர சோதனை

காஞ்சிபுரம் நகர கோவில்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து, அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில்களின் நகரமான காஞ்சி நகர கோவில்களில் சந்தேகத்துக்கிடமான வகையில் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக வாட்சப் போன்ற...

ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்

காஞ்சிபுரம் நகரில் ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேர், பட்டாகத்தியுடன் சென்று, 7 பேரை கத்தியால் குத்திய சம்பவம், பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ரவுடி தியாகுவின் வீடு, கார் போன்றவற்றை அடித்து நொறுக்கிய அந்த கும்பல், 2 இருசக்கர வாகனம், 4...

ஆருத்ரா தரிசனம் கோலாகலம்...

தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை பக்தி பெருக்குடன் தரிசித்தனர்.  திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடராண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள்...

உள்ளாட்சி தேர்தலில் செல்லாமல்போன வாக்குகள் அனைத்தும் அ.தி.மு.கவின் வாக்குகள் - அமைச்சர்

உள்ளாட்சித் தேர்தலில் செல்லாமல் போன வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கான வாக்குகளே என்றும், எனவே நடந்து முடிந்த தேர்தலில் தங்கள் கட்சியே முழுமையான வெற்றியை பெற்றது என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் 24 மனை தெலுங்கு...

ஓட்டலில் ஓசி சோறுக்காக நகராட்சி ஊழியர்கள் அடம்..! அம்பலத்துக்கு வந்த மிரட்டல்

காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்ட சோற்றுக்கு பணம் தர மறுத்து 5 நகராட்சி ஊழியர்கள் செய்த அடாவடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாப்பாட்டிற்கு காசு கேட்ட கடை உரிமையாளரிடம் உரிமத்தை ரத்து செய்வோம் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த...

சென்னையில் மழையோடு துவங்கிய புத்தாண்டு.. மக்கள் மகிழ்ச்சி

புத்தாண்டு தினமான இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, அம்பத்தூர், தியாகராயநகர், சாந்தோம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம்,...

சூரிய கிரகணத்தை முன்னிட்டு 1,200 கோவில்கள் மூடப்படும்

நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,200 கோவில்கள் மூடப்படும் என இந்து அறநிலை துறை அறிவித்துள்ளது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில், அஷ்டபுஜ பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் குமரக்கோட்டம் முருகன் கோவில்,...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காஞ்சிபுரம் ஆட்சியருக்கு வாரண்ட்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு ஒரு சென்ட்டுக்கு, 5,500 ரூபாய்...