​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு - அமைச்சர்

ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட மக்கள் விரும்பாத எந்த திட்டமும் செயல்படுத்தபடக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில், சாலை பாதுகாப்புவார விழாவை ஒட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை...

குடியரசு தினவிழாவை முன்னிட்டு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தினவிழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 26 மற்றும் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறும் 3 நாட்களுக்கும் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 20, 22, 23 மற்றும் 26...

ரேஷன் அரிசி கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும்: அமைச்சர் காமராஜ்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவினர் அமைச்சர் காமராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் பல்வேறு கட்சிகளில்...

மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக 500 டன் வெங்காயம் வருகிறது- அமைச்சர் காமராஜ்

மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக 500 மெட்ரிக் டன் வெங்காயம் வந்துகொண்டு இருக்கிறது என்றும் 13, 14ஆம் தேதிகளில் அவற்றை குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,...

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் ஓரிரு தினங்களில் வர வாய்ப்பு - அமைச்சர் காமராஜ்

துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயம் ஓரிரு தினங்களில் வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் வந்திருந்த அமைச்சர், செய்தியாளர்களை சந்திக்கையில்...

சிலம்பாட்ட வீரர்களுக்கான போட்டித் தேர்வு

மதுரையில் சர்வதேச சிலம்பம் போட்டிகள் வரும் ஜனவரி மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, வீரர்கள் தேர்வு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து சிலம்பாட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து...

ரஜினியும், கமலும் இணைவது பேசும் பொருளாக மட்டுமே இருக்கும், நாட்டிற்கு உதவாது - அமைச்சர் காமராஜ்

நடிகர் ரஜினியும், கமலும் இணைவது பேசும் பொருளாக இருக்குமே தவிர, நாட்டிற்கு உதவாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட தாலுக்காக்களில் மகளிர் குழுவைச் சேர்ந்த 509 பேருக்கு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சமுதாய...

3 மாதங்களுக்கு தேவைப்படும் அரிசி இருப்பு வைப்பு - அமைச்சர் காமராஜ்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 3 மாதங்களுக்கு தேவைப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை...

ஒருநபர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் - உணவுத்துறை அமைச்சர்

தமிழகம் முழுவதும் ஒருநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள்கூட, அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற தகுதியானவர்கள் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை

பண்மை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் என்று அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, இரா. காமராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர். வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து...