​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

11,12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இந்தப் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு வகுப்பு பயிலும் 424 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்....

3000 பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் - செங்கோட்டையன்

மூன்றாயிரம் பள்ளிகளில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் டிசம்பருக்குள் 622 பள்ளிகளில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களின் விஞ்ஞான அறிவை வளர்க்க...

அடுத்த மாதத்திற்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 285 தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில்...

அ.தி.மு.க. அரசுக்கு எப்போதுமே குரு உச்சத்தில் உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

அ.தி.மு.க. அரசுக்கு எப்போதுமே குரு உச்சத்தில் உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நெல்லை, குமரி, தேனி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சார்ந்த 322  தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி, விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் நடைபெற்றது. இதில்...

10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல், ஜுனில் மட்டும் மறுதேர்வு

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த ஆண்டு முதல் ஜுனில் மட்டும் மறு தேர்வெழுதுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9ஆம் வகுப்பு முதல்...

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள அமைச்சர் செங்கோட்டையன் அங்குள்ள கல்வி நிலையத்தை பார்வையிட்டார்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்குள்ள கல்வி நிலையத்தை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். பிறந்த கண்டியில் அவரது நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும்...

12ஆம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் வணிகவியல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி - செங்கோட்டையன்

12ஆம் வகுப்பில் வணிகவியல் துறையில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி துவக்க விழாவில் கலந்துகொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம்...

தமிழகத்தில் இன்று முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் இயங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அமைக்கப்பட்ட 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு, பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவராணபொருட்கள்...

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதம் மட்டுமே தேர்வு நடைபெறும் - செங்கோட்டையன்

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஜூலை மாதம் மட்டுமே தேர்வு நடைபெறும் எனத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர் நாளையொட்டி 373 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட...

அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு

கும்பகோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கும்பகோணம் அஞ்சுகம் நகரில் செயல்படும் இந்த பள்ளிக்கு காலையில் வந்த அமைச்சர், மாணவ- ஆசிரியர்களின் செயல்படுகள், கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்தார். பின்னர் பள்ளி...