​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலியல் குற்றவாளிகள் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணை குழு அமைத்து தெலங்கானா அரசு உத்தரவு

ஹைதராபாத் பாலியல் குற்றவாளிகள் என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற விவகாரத்தில் கைதான 4 பேர், விசாரணையின் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு...

ISIS அமைப்புடன் தொடர்புடைய வழக்குகளில் அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 33 பேர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பான வழக்கில் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் உள்பட 127 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிறப்பு பணிக்குழு தலைவர்களின்...

ராஜீவ் குமாரை எளிதில் கண்டுபிடிக்க முடியாது - கொல்கத்தா காவல்துறை

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிஐ அமைப்பால் தேடப்படும் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்று கொல்கத்தா நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாரதா நிதிநிறுவன மோசடி, ரோஸ்வேலி நிறுவன மோசடி விவகாரங்கள் குறித்த...

பாகிஸ்தான் WhatsApp குழுக்களில் தொடர்பில் இருந்த இளைஞரை பிடித்து கோவை போலீசார் விசாரணை

பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ் ஆப் குழுவில் துப்பாக்கி தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாக, வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞரைப் பிடித்து கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோவையில் தங்க நகைப் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருபவர் பாருக் கெளசீர். வங்கதேசத்தைச் சேர்ந்த...

சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடமும் டெல்லியில் விசாரணை

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான சிவக்குமாரின் மகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2017ஆம் ஆண்டில் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் இருந்த போது, அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது....

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு

தமிழகத்தில் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட 14 பேரது வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சோதனை நடந்தது.  ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கய்தா, சிமி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட...

மறுமலர்ச்சி மகளிர் சங்கம் என்ற பெயரில் பண மோசடி

காஞ்சிபுரம் அருகே மகளிர் சங்கம் நடத்தி 35 லட்ச ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த மாவட்டத்தின் மதுராந்தகத்தில், “மறுமலர்ச்சி மகளிர் சங்கம் ஒன்றை பாஷா என்பவர் நடத்தி வந்தார். அதில் 2500 பேர் உறுப்பினர்களாக இருந்த நிலையில், உறுப்பினர்கள்...

கோவையில் மீண்டும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

கோவையில் மீண்டும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா, இப்ராகிம் என்ற ஷாஹின்ஷா, அக்ரம் சிந்தா, சதாம் உசேன், அபுபக்கர் ஆகியோரின் வீடுகளிலும் ஒரு அலுவலகத்திலும் தேசிய புலனாய்வு நிறுவன...

காதல் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரை ஓசூருக்கு அழைத்து வந்து கர்நாடக போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரை ஓசூருக்கு அழைத்து வந்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்தினர். ஓசூர் அருகே சுடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்திஸ், அதே பகுதியைச் சேர்ந்த சுவாதி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்....

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த டி.எஸ்.பி. திருவனந்தபுரத்தில் தற்கொலை - உடலை மீட்டு கேரள போலீசார் விசாரணை

கேரளாவில் இளைஞரை சாலையில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த டி.எஸ்.பி ஹரிகுமார் திருவனந்தபுரம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள நெய்யாற்றின்கரையில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய ஹரிகுமார், கொடுங்ஙாவிளையில் உள்ள தோழி ஒருவரின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வதாக கூறப்படுகிறது....