​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டு வரும் பிரமாண்ட மலைப்பாம்பு

இந்தோனேஷியாவில் பிரம்மாண்டமான மலைப்பாம்புடன் சிறுவன் கட்டியணைத்து விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது. கிழக்கு ஜாவா பகுதியில் படமாக்கப்பட்ட இந்த வீடியோ ரெடிகுலேட்டட் வகையைச் சேர்ந்த மலைப்பாம்பு ((Reticulated Python)) ஒன்று வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வரும் இந்தப்...

இந்தோனேசியாவில் இயந்திரப் படகில் தீப்பிடித்து கடலுக்குள் மூழ்கியது

இந்தோனேசியாவில் இயந்திரப் படகில் தீப்பிடித்த சம்பவத்தில், குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 150 பயணிகளுடன் பயணித்த அந்த பெரிய படகு சுலுவாசி மாகாணத்தில் திடீரென தீப்பிடித்து கடலில் மூழ்கியது. பேரலைகளில் சிக்கித் தவித்த 126 பயணிகள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர்.  இன்னும்...

கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி...

இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது.  இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மற்றும் பாலெம்பாங் நகரில் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில், 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 300...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அந்நாட்டின் டிமோர் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. டிமோர் தீவில் உள்ள குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை...

மசூதியில் இரைச்சல் அதிகமுள்ளதாகப் புகாரளித்த பெண்ணை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம்

இந்தோனேஷியாவில் மசூதியில் இரைச்சல் அதிகமுள்ளதாகப் புகாரளித்த பெண்ணை இறை நிந்தனை வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் மசூதியில் இரைச்சல் அதிகமுள்ளதாகக் கூறி சீனாவைச் சேர்ந்த மெய்லியானா (Meiliana) என்பவர் புகாரளித்தார். இதுகுறித்த தகவல் பரவியதை...

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நேரிட்ட 2 நிலநடுக்கத்தில் 12 பேர் பலி என தகவல்

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நேரிட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டில் சுற்றுலாப் பயணிகள் திரளும் லாம்போக் தீவில் கடந்த ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தினங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 460-க்கும் அதிகமானோர் பலியாகினர். ஏராளமான வீடுகள் இடிந்து...

அழிந்து போனதாகக் கருதப்பட்ட மரக்கங்காரு படம் பிடிக்கப்பட்டது

பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து போனதாகக் கருதப்பட்ட மரக்கங்காரு தற்போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பப்புவா என்ற இடத்தில் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் ஸ்மித் என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட மரத்தில் சிறு சிறு...

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்

இந்தோனேசியாவில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6 புள்ளி 9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து இரண்டு மிதமான நில நடுக்கங்களும் தொடர் அதிர்வுகளும் அங்கு...

இந்தோனேசியாவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்நாட்டில் லாம்போக் தீவில் கடந்த 6-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டு, 80-க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், காலை அந்த தீவில் செம்பலுன் ((Sembalun)) என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 என்ற...

அழிக்கப்பட்ட காடுகளின் நடுவே தவித்த உராங்குட்டான் குரங்கு

இந்தோனேஷியாவில் தாயின்றி தவித்த மிகச்சிறிய உராங்குட்டான் வகை குரங்கு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மேற்கு போர்னியோ பகுதியில் பனை எண்ணெய் எடுப்பதற்காக காடுகளை அழித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வாழ்ந்த பல்வேறு வகையான உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குச் சென்று விட்டன. மேலும் வனங்கள் அழிக்கப்படுவதால்...