​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவிலிருந்து கூடுதல் எண்ணெய், எரிவாயு இறக்குமதி - சிங்கப்பூர் மாநாட்டுக்கிடையே இந்தியா அறிவிப்பு

அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே, அமெரிக்காவுடனான வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் கூடுதல் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக...

தடகள வீராங்கனை ஹீமா தாசுக்கு யுனிசெப் கவுரவம்

இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாசை, இந்திய இளையோரின் தூதராக, யுனிசெப் அமைப்பு நியமித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள வாகையர் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில், ஹீமா தாஸ், தங்க பதக்கம் வென்றார்....

மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா. சபையின் வரைவுத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிப்பு

மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா. சபையின் வரைவுத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது. ஐ.நா. சபையில் உள்ள 6 முக்கியக் குழுக்களில் ஒன்றான சமூக, மனித உரிமை மற்றும் கலாச்சார விவகாரங்களை கையாளும் 3-வது குழு மரண தண்டனைக்கு எதிரான வரைவுத் தீர்மானத்தைக்...

இந்தியாவில் புதிதாகப் பணியமர்த்தும் விகிதம் 92சதவீதமாக இருக்கும் என தகவல்

இந்தியாவில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் விகிதம் இந்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் 92 விழுக்காடாக இருக்கும் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பு விகிதம் குறித்து டீம்லீஸ் எம்ப்ளாய்மென்ட் அவுட்லுக் நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஆட்களைப்...

உலக தாக்கத்தால் சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுகின்றன - ஜாக் டோர்சி

உலகளாவிய தாக்கத்தால், இந்தியாவில் வெளியேற முடிவு செய்யும் நிறுவனங்கள், தொடர்ந்து இயங்குவதற்கு முடிந்தவரை உதவிகளை செய்ய இருப்பதாக, டுவிட்டர் சி.இ.ஓ. தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியும், இணை நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்களிடையே...

கூடுதல் மது தரவில்லை என ஏர் இந்தியா ஊழியரின் முகத்தின் எச்சில் துப்பிய பெண்

பறக்கும் விமானத்தில் ஏர் இந்தியா ஊழியரின் முகத்தில், குடிபோதையில் இருந்த பெண் பயணி எச்சில் துப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மும்பையில் இருந்து லண்டன் நோக்கி கடந்த சனிக்கிழமை ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த அயர்லாந்து நாட்டைச்...

ஏர் இந்தியா ஊழியரை தகாத வார்த்தைகளால் வசைபாடிய பெண்

ஏர் இந்தியா விமானத்துக்குள் அதன் ஊழியரை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை லண்டனிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியாவின் ஏஐ 131 விமானத்தில் அயர்லாந்தைச் சேர்ந்த பெண் அதிகளவு...

கஜா புயல் நாளை மாலையில் கரையை கடக்கும்.. வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நாளை மாலையில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும்,...

மோடி பிரதமராக யார் காரணம் என சசி தரூர் கேள்வி

விண்வெளித் திட்டங்கள், ஐ.ஐ.டி.க்கள் போன்றவற்றை உருவாக்கியதும், அமெரிக்காவின் பிரபல கணினி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததும் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார். தேநீர் கடை நடத்திய...

மது அருந்தி விட்டு விமானத்தை இயக்கவிருந்த ஏர் இந்தியாவின் தலைமை விமானி அரவிந்த் கத்பாலியா, பணிநீக்கம்

மது அருந்தி விட்டு விமானத்தை இயக்கவிருந்த ஏர் இந்தியாவின் தலைமை விமானி அரவிந்த் கத்பாலியா, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானம் கடந்த ஞாயிற்றுக் கிழமை புறப்பட தயாராக இருந்த போது, விமானத்தின் தலைமை விமானியான அரவிந்த் கத்பாலியா ஆல்கஹால்...