​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சசிகலாவின் ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, பினாமி பரிவர்த்தனைகள் தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முடக்கப்பட்டுள்ள சொத்துகள் 2016ஆம் ஆண்டு நவம்பர்8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குப் பிறகு வாங்கப்பட்டவை...

டாடா அறக்கட்டளைகளின் பதிவுகள் ரத்து

டாடா நிறுவனத்துக்கு சொந்தமான அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 6 அறக்கட்டளைகளின் பதிவுகளை வருமானவரித்துறை ரத்து செய்துள்ளது. ஜாம்ஷெட்ஜி டாடா டிரஸ்ட், ஆர்.டி.டாடா டிரஸ்ட், டாடா கல்வி டிரஸ்ட், டாடா சமூக முன்னேற்ற டிரஸ்ட்,சர்வஜனிக் சேவா டிரஸ்ட் மற்றும் நவஜ்பால் ரத்தன்...

1072 மேல்முறையீட்டு வழக்குகளை திரும்பப் பெற்ற வருமான வரித்துறை

வருமானவரித்துறை தனது 1072 மேல்முறையீட்டு வழக்குகளை, திரும்பப் பெற்றுள்ளது. இந்த தகவல், வருமானவரித் துறையின் நீதி பிரிவிற்கான ஆணையர் துர்கேஷ் சம்ரோட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வருமானவரி செலுத்துவோரின் நலன் சார்ந்த தொடர் வரிசையில், வருமானவரித்துறை சார்பில் மேல்முறையீடு செய்வதற்கான உச்சவரம்புத்...

வருமான வரிச் சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு திட்டம்

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 5 சதவீத வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. 5 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கான அதிகபட்ச வரி...

சொத்துவரி குறைகளை ஆராய குழு அமைப்பு-சென்னை மாநகராட்சி

சொத்துவரி தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண 23 பேர் கொண்ட குழுவை அமைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டது. இதனால் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக வரி செலுத்துவதாக கூறி பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை தொடர்ந்து,...

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு

கல்கி ஆசிரமதித்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவுபெற்றுள்ள நிலையில், 800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பினாமி சொத்துகள், ஹவாலா பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத 4 ஆயிரம் ஏக்கர் நிலம், வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை...

கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் 2வது நாளாக சோதனை

கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்திலுள்ள கல்கி ஆசிரமத்திற்கு தமிழகத்திலிருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், 4 குழுக்களாக பிரிந்து ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமான...

கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்

ரூ.20 கோடி பறிமுதல் கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் வருமான வரித்துறை சோதனையின் போது கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் கத்தை கத்தையாக ரொக்கப்பணம் பறிமுதல் கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய 40 இடங்களில்...

மகனால் புறக்கணிக்கப்பட்டு தெருவில் வீசப்பட்ட மூதாட்டி

தூத்துக்குடி அருகே மகனால் புறக்கணிக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டு பட்டினியாலும், கொட்டும் மழை - வெயிலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை வருவாய்த்துறையினர் உதவிக்கரம் நீட்டி மீட்டு மருத்துவமனயில் அனுமதித்தனர். கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி சண்முகத்தாய். இவர் தனது...

கட்டுக்கட்டாக சிக்கிய நோட்டு சோதனையின் பின்னணி...

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு சென்னை  உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் கிரீன் பார்க் கல்வி குழுமத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் 30 கோடி ரொக்கம் சிக்கிய நிலையில், இந்த நிறுவனம் செய்த முறைக்கேடு என்ன? சோதனையில் சிக்கியது எப்படி? என...