​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இசைத் துறையில் புரிந்து வரும் சாதனைகளுக்காக மதுரை காமராசர், அண்ணா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து 4 டாக்டர் பட்டங்களை இளையராஜா பெற்றுள்ளார். இந்த நிலையில், ஐந்தாவது...

இளையராஜா எஸ்.பி.பியை சேர்த்து வைக்க பெரும்பாடு பட்டேன் - தீனா

இளையராஜாவையும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் பெரும்பாடு பட்டு சேர்த்து வைத்ததாக இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ”உயிரின் உயிர் பாட்டு” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இசைத் தொகுப்பு அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தின்...

“கேப்மாரி” இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்..! பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு

இப்போது உள்ள பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை சொல்வதாகவும்  நடிகர் விஜய்யின் தந்தையும், கேப்மாரி படத்தின் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம்...

இளையராஜாவை புலம்ப விட்ட புரட்சி தளபதி..! காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்கள்

இளையராஜாவுக்கு பாராட்டு விழா  நடத்துவதாக கூறி வசூலித்த பணத்தில் ஒரு கோடி ரூபாய் கொடுக்காமல் நடிகர் விஷால், இளையராஜாவை தவிக்கவிட்டு விட்டதாக தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார் குற்றஞ்சாட்டி உள்ளார். அயோக்யா புகழ் விஷாலால் இப்போது இளையராஜா தனக்கு தானே பாடிவருவதாக...

இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம்

இசையமைப்பாளர் சங்கத்திற்கு தமது சொந்த செலவில் கட்டடம் கட்டிக் கொடுப்பதாக இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். இளையராஜாவின் 76வது பிறந்தநாளையொட்டி திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோரும், திரளான ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நேற்று மாலை இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில் பூந்தமல்லி அருகே இசை நிகழ்த்தி...

இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: இசைஞானி இளையராஜா

இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என இசைஞானி இளையராஜா அறிவித்திருக்கிறார். இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த இளையராஜாவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மக்கள்...

40 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் 76 வது பிறந்தநாள் இன்று...!

இசையமைப்பாளர் இளையராஜாவின் 76 வது பிறந்தநாளை இன்று திரையுலகமே கோலாகலமாகக் கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற இசைஞானி குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது காண்போம்.... இன்று 76 வது பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜா திரையுலகில் நுழைந்த ஆண்டும் 76...

இளையராஜாவின் பிறந்தநாள் இசைவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களிலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் விழாக்கள் நடைபெற்ற நிலையில் பல ஆண்டுகளாக...

பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ கூடாது : இளையராஜா

பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ கூடாது என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் தனது 75 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா, மாணவிகள் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்....

தமது பிறந்தநாள் விழாவில், பல்வேறு பாடல்களைப் பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்திய இளையராஜா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, பல்வேறு பாடல்களைப் பாடி மாணவ, மாணவிகளை உற்சாகமூட்டினார். இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா, சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா, தாம் இசையமைத்த பல்வேறு...