​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐடியா நிறுவனத்தில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது குறித்துத் தொலைத்தொடர்பு அமைச்சகமே முடிவெடுக்க வேண்டும் - சுரேஷ் பிரபு

ஐடியா நிறுவனத்தில் 100விழுக்காடு நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது குறித்துத் தொலைத்தொடர்பு அமைச்சகமே முடிவெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். ஓடபோன் நிறுவனமும் ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணையத் திட்டமிட்டுள்ளன. ஏற்கெனவே ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் 34விழுக்காடு வெளிநாட்டு...

ஐடியா செல்லுலர் நிறுவனத்துக்கு 2017-18 நிதியாண்டின் 4வது காலாண்டில் ரூ.962 கோடி நட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, ஐடியா செல்லுலர் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் செல்போன் சேவை வழங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லுலர், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டியை...

ஒன்றிணைய இருக்கும் Vodafone, Idea நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்புத்துறை நிபந்தனை

ஓடபோன், ஐடியா நிறுவனங்களின் இணைப்புக்கு முன்பு 19ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஓடபோனும், மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியாவும் இணைந்து ஒரே நிறுவனமாக மாறத் திட்டமிட்டுள்ளன. அப்படி...

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை நல்லதல்ல என்று பிரதமரிடம் கூறினேன் - ரகுராம்ராஜன்

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்துவது நல்லதல்ல என்று பிரதமர் மோடியை தாம் எச்சரித்ததாக, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் உள்ள ஹாவார்ட் கென்னடி பள்ளியில் உரை நிகழ்த்திய அவர், 87 சதவீத பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட...

இந்திய ரயில்வேயை சீரமைப்பதற்குச் சிறந்த கருத்துரை வழங்குபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசு

இந்திய ரயில்வேயை சீரமைப்பதற்குச் சிறந்த கருத்துரை வழங்குபவர்களுக்கு முதல் பரிசாகப் பத்து லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் 67ஆயிரத்து 378கிலோமீட்டர் நீளத்துக்கு ரயில்பாதைகள் உள்ளன. இதில் நாள்தோறும் 13ஆயிரத்து 329 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு நாளில் இரண்டேகால்...

ரூ.2,000 நோட்டுகளை தடை செய்யும் எண்ணமில்லை - மத்திய அரசு

2 ஆயிரம் ரூபாயை செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்....

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை - நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறியுள்ளார். திருச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து, தனியார் சிறு மற்றும் குறு தொழில்துறை நிறுவனங்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும்...

மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை

மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முன்னெடுப்பை, சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு பரிந்துரைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள நன்மைகளை சுட்டிக்காட்டி, அதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும் என பிரதமர்...

நெட்வொர்க் கிடைக்காத போதும் ஏர்செல்லிலிருந்து வேறு சேவைக்கு மாறுவது எப்படி?

ஏர்செல் மொபைல் வைத்திருப்பவர்கள் நெட்வொர்க் கிடைக்காத போதும் வேறு சேவைக்கு மாறலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் செல்போனில் நெட்வொர்க் செட்டிங் எனும் பகுதிக்கு சென்று நெட்வொர்க் தேர்வை ஆட்டோமேட்டிக் என்பதிலிருந்து மேனுவல் என மாற்ற வேண்டும். இதன் பின்னர் சேவை நிறுவனத்திற்கான...

Jio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு

ஜியோ நிறுவனத்தின் அதிரடி சலுகை அறிவிப்பால், மும்பை பங்குச் சந்தையில், ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தன. புத்தாண்டு தினத்தை தொடர்ந்து, குடியரசு தின சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம் ஒன்றரை ஜி.பி. டேட்டா வழங்கப்படும் திட்டங்களுக்கு 2...